Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 காங்கிரஸ் குறித்து பேச தமிழிசைக்கு தகுதியில்லை

 காங்கிரஸ் குறித்து பேச தமிழிசைக்கு தகுதியில்லை

காங்., மற்றும் தி.மு.க., கூட்டணி குறித்து, கட்சி தலைமை முடிவு செய்யும். இப்போதைக்கு, கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறி, கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசி வருவோர் மீது, தலைமையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என நாங்கள் யாரும் சொல்லவில்லை. எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். வரும் 22ம் தேதி, கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்க உள்ளது.

காங்., தலைவர்களை, கட்சி தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை கூறுகிறார். அப்படி சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை. பா.ஜ.,வில் இருக்கும் தலைவர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை; அடுத்த கட்சி விவகாரத்துக்குள் மூக்கை நுழைக்க வந்து விட்டார். எங்கள் கட்சியை கட்டுப்படுத்த எங்களுக்கு தெரியும்; தமிழிசை போன்றோரின் ஆலோசனை எதுவும் தேவையில்லை.

- விஜய் வசந்த்

காங்கிரஸ் எம்.பி.,

Advertisement