Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


தமிழக சட்டசபை தேர்தல் மார்ச்சில் அறிவிப்பு?

தமிழக சட்டசபை தேர்தல் மார்ச்சில் அறிவிப்பு?

புதுடில்லி: தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, கூறப்படுகிறது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம், ஜூன் 15ல் முடிகிறது. தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைகளின் பதவிக்காலம், மே மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. இதை முன்னிட்டு, ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்றும், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பல கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், புதுச்சேரி, அசாமில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 23ல் வெளியாக உள்ள நிலையில், கேரளாவில், 21லும், மேற்கு வங்கத்தில் 28லும் வெளியாகிறது.

Advertisement