Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் ஐக்கியம்

அழகிரி ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் ஐக்கியம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கருணாநிதி மகன் அழகிரியின் ஆதரவாளரான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன், இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2014 ல் மதுரையில் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

முதல்வர் குடும்பத்துக்கும் அழகிரி குடும்பத்திற்கும் சமாதானம் ஏற்பட்ட நிலையிலும் அழகிரி ஆதரவாளர்கள் யாரும் திமுகவில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், தன் வீட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரிடம், ' என் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்,' என அழகிரி வலியுறுத்தினார்.ஆனால், திமுக தலைமை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து அமைதியாக இருக்கிறது.
இனியும் திமுகவை நம்பியிருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என முடிவுக்கு வந்த அழகிரியின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்தனர்.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் துணை மேயர் மன்னன் சென்னையில் இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
இதன் பிறகு மன்னன் கூறுகையில், ' வரும் சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்கு முழு ஒத்துழைப்போம். இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் பலர் அதிமுகவில் இணைவார்கள். திமுகவின் மமதை வரும் தேர்தலில் புரியும். திமுக தொண்டர்கள் குமுறலில் உள்ளனர்.' என்றார்.

Advertisement

பிப் 18, 2026 04:53 am

மன்னன் மீது பற்பல போலீஸ் வழக்குகள் உள்ளது. அழகிரியின் முக்கிய அடியாள், இவனுங்க எல்லாம் கட்சியில சேர்வது போட்டோவுடன் செய்தி, காலக்கொடுமை.

Reply Rate this
பிப் 18, 2026 12:32 am

மதுரை மன்னன் ஆதரவுடன், தமிழகத்தில் பழனிசாமி மன்னர் ஆட்சி அமையும்.

Reply Rate this
பிப் 17, 2026 07:41 pm

இதுநாள் வரை அதிமுகாவிலிருந்து தீமுகாவிற்கு போய்கொண்டுஇருந்தார்கள். இப்போ அதிமுகாவின்காலம். காலம் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. விடியலின் அழிவுகாலம் காலம் ஆரம்பம்.

Reply Rate this
பிப் 17, 2026 04:44 pm

திமுகவின் மமதை வரும் தேர்தலில் புரியும்.‌ ஆம் புரியணும் புரிந்தே ஆகணும். திருட்டு தீயமுகவுக்கு விழும் ஓட்டு ங்குறது அப்பட்டமாக பணத்துக்காக விழுந்த ஓட்டு என்பதில் சந்தேகமில்லை.‌ ஆனா பாருங்க, மக்கள் எங்களை ஆதரிக்குறாங்க ன்னு பீலா உடுவானுங்க. ஆக்டர் விஜய்க்கு இந்த மாதிரி கள்ள பணம் எதுவும் குடுக்காமலேயே ஓட்டு விழும் போல இருக்கு. எதை தின்றால் பித்தம் தெளியும் ங்குற நிலைமையில் திருட்டு தீயமுக தடுமாறிக்கொண்டு இருக்கு.‌

Reply Rate this