எம்ஜிஆர் நடித்த இதயக்கனி: தியேட்டரில் பார்த்து ரசித்த இபிஎஸ்
சென்னை : “சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக சிலர் கனவு காண்கின்றனர்” என த.வெ.க., தலைவர் விஜயை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் மறைமுகமாக தாக்கினார்.
சென்னையில், 'ஆல்பர்ட்' தியேட்டரில், எம்.ஜி.ஆர்., நடித்த இதயக்கனி படம், ரீ ரிலீஸ் ஆனது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளோடு, இபிஎஸ் கண்டு ரசித்தார்.
இது குறித்து, அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும், 'பிளாக்பஸ்டர் ஹிட்' அடிக்கிறது. சினிமாவில் அரசியலை புகுத்தி, வெற்றி பெற்றவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். சினிமாவில் நிஜமாகவே, உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்கு வந்தவர். தனது படங்களில் புகைப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்தார். ஆனால், தற்போது சிலர், சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக நினைக்கின்றனர். அதையே கனவாகவும் காண்கின்றனர். அக்கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
All politicians, who are not from Cine field, should be sacked from Politics.
தேர்தல் நேர அலப்பறை ஆரம்பித்து விட்டது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.

ஏற்கனவே தன்னை எம் ஜி யார் அம்மா ஜெ என்று மனதில் எண்ணிக்கொண்டிருந்த பழனிச்சாமி அவர்கள் இப்போ இந்த படத்தை வேறு பார்த்துவிட்டாரா இனி கட்சியில் யார் யாரை வெளியேற்ற போகிறாரோ தெரியல. கூட்டணி தொடருமா அல்லது இருக்குமா என்பதை கூட உறுதியாக சொல்ல முடியாது. அப்படி ஒரு மனசுல எம் ஜி யாராகவே தன்னை நினைத்துக்கொண்டு சினிமாவை பார்த்துவிட்டு வருவார். எம் ஜி யார் ரசிகர்களை கவருகின்றாராம்..