Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 முதல்வருக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டோம்: திருமாவளவன்

 முதல்வருக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டோம்: திருமாவளவன்

சிதம்பரம்: தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்க்க தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை என, வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சிம்பரத்தில் நடந்த முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியது:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள், டாஸ்மாக் உள்ளிட்ட பல் வேறு துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக முதல்வர், 3 மாத மகளிர் உரிமைத்தொகை, கோடைகால சிறப்பு தொகை என, 5 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். மகளிர் பொருளாதாரத்தில் வலிமை பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை வி.சி., கட்சி வரவேற்கிறது.

தேர்தலில் தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2017 இருந்து தொடர்ந்து வருகிறது.

ஆனால், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி சிதறியுள்ளது. இதுவரைரயில் கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை. தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்க்க தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை.

தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தை 22ம் தேதி முதல் நடைபெறும் என தி.மு.க., தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

காங்., நிலைப்பாடு பற்றி நான் கருத்து சொல்ல ஏதுமில்லை. விடுதலை சிறுத்தைக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. எங்கள் கூட்டணியில் கட்சிகளிடையே முரண்பாடுகள் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ள முடியும். கூட்டணி நலன்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த முடிவையும் வி.சி., கட்சி எடுக்காது.

தி.மு.க., தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்பது குறித்த முழு அதிகாரம் முதல்வருக்கு உண்டு. அவருக்கு நாங்கள் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisement

பிப் 17, 2026 12:34 pm

வெட்கம் கெட்ட அரசியல்வாதி

Reply Rate this
பிப் 16, 2026 07:43 pm

கொடுத்தாலும்.

Reply Rate this
பிப் 16, 2026 07:41 pm

கிடைக்கும் இரண்டு மூன்று சீட்டும் போய் விடுமே.

Reply Rate this
பிப் 16, 2026 04:38 pm

கவலை வந்துவிட்டது

Reply Rate this
பிப் 16, 2026 03:43 pm

இவர்கள் தேர்தலில் நின்று மக்களால் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். டெபாசிட் இழந்து இதுவரை பதுக்கிய பணம் சிதம்பரம் தொகுதி மக்களுக்கு சென்றடையவேண்டும்

Reply Rate this
பிப் 16, 2026 02:51 pm

நீங்க எல்லாம் நல்லாத்தாண் இருக்கீங்க பணத்துக்கும் பதவிக்கும் கொஞ்சமாச்சும் வோட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமே இருங்க கேடு கெட்ட மானிடன்

Reply Rate this
பிப் 16, 2026 01:46 pm

இவ்வளவு போடுங்கள் என்று அழுத்தம் தர மாட்டோம்.

Reply Rate this
பிப் 16, 2026 12:52 pm

சாக்கிரதை பிசெபி உள்ளவந்துடும்

Reply Rate this
பிப் 16, 2026 10:45 am

எங்களோட பாலிசியே அதுதான்.

Reply Rate this
பிப் 16, 2026 10:37 am

அப்படியே இவர் சொன்ன உடனே அவுங்க கேட்டிருவாங்க ...

Reply Rate this