த.வெ.க.,வுக்கு தாவிய மகன்; தர்மசங்கடத்தில் 'மாஜி' சபாநாயகர்
திருப்பூர்: அவிநாசி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், த.வெ.க.,வில் இணைந்ததால், தனபால் கடும் தர்மசங்கடத்தில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறினர்.
அவிநாசி தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக முன்னாள் சபாநாயகர் தனபால் இருந்து வருகிறார். கடந்த 1977, 1980, 1984, 2001 தேர்தல்களில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ல், அமைச்சராக இருந்தார். பின், ஜெயலலிதா ஆட்சியில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2016 மற்றும், 2021 தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது, ஏழாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., - ஐ.டி., அணியில் இருந்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில், நீலகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்று தோல்வியடைந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து லோகேஷ் விலகி, த.வெ.க.,வில் இணைந்துள்ளார். இது, தனபாலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனபால் கூறியதாவது: ஏழு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை மற்றும் வீட்டில் இருந்தேன். கட்சியில் இருந்து யாரும் வந்து என்னை பார்க்கவில்லை. அந்த கோபத்தில் என் மகன் கட்சி மாறி விட்டார். அது எனக்கு சங்கடம் தான்.
கடந்த, 2017ல், நான் சபாநாயகராக இருந்த போது, நான் தான், அ.தி.மு.க., அரசை காப்பாற்றிக் கொடுத்தேன். அ.தி.மு.க., விசுவாசியாகவே இருப்பேன். கட்சி மாறும் எண்ணம் எனக்கு இல்லை. வரும் தேர்தலில் 'சீட்' கேட்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
Admk getting vote for 2 leaf symbol and jj name. No one put vote for dhanapal or his son personality.
தி.மு.க வில் இன்றும் பட்டியலினத் தலைவர்களுக்கு அமர ஒழுங்கான இருக்கை கூட தரப்படுவதில்லை. பிளாஸ்டிக் இருக்கையில்தான் அமர வைக்கப் படுகின்றனர். திரு. தனபால் அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து எல்லோரும் மரியாதை தரும் விதமான பதவியில் அமர்த்தியது அ.தி.மு.க கட்சி. திரு.தனபாலின் மகனுக்கு சென்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட அ.தி.மு.க அவரை வேட்பாளராக சீட் வழங்கியது. வரும் சட்டசபை தேர்தலில் அவருக்கு சீட் இல்லை என்ற நிலையில் கட்சியின் தலைமை இருந்திருக்கலாம். அதனால்தான் த.வெ.கவிற்கு உடனடி கட்சித் தாவல்.
மகன்கள் கட்சி மாறுவதெல்லாம் பெரிய விசயமே இல்லை.ஏன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் இன்றைய முதல்வர் ஸ்டாலினின் அண்ணனே அ.தி.மு.கவில் இணையவில்லையா?
பட்டியலின அரசியல்வாதிகளுக்கு எல்லாக் கட்சிகளிலும் ஒப்புக்குதான் இடம். கஷ்டகாலத்தில் நடுச்சாதி தலைவர்கள் எட்டிக்கூட பார்க்க வர மாட்டார்கள். திராவிட சமூகநீதி லட்சணம் இதுதான்.
கப்பல் கவிழப்போகும் எலிகள் வெளியேறுவது சகஜம்தானே பார்ப்போம், விஜய் கட்சியில் என்ன விதம் treatment கிடைக்கிறதென்று ஏன், திருச்சி சிவா மகன் கூட பி ஜே யில் இணையவில்லையா?
எதுக்கு தர்ம சங்கடம். எந்த கட்சி ஜெயிச்சு வந்தாலும் அங்க நம்ம ஆள் இருந்தா நல்லதுதானே.

எடப்பாடி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்