இரு கொ.மு.க., கட்சிகள் தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு
சேலம்: தமிழகத்தில், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, கொங்கு முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதன் மாநில பொதுச்செயலர் தங்க வேல் தலைமையில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர்.
அதே போல, கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் அதன் நிர்வாகிகளும் பழனி சாமியை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்து கடிதம் வழங்கினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)