Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


த.வெ.க., - காங் கூட்டணி? விஜய் வீட்டில் ஆலோசனை

த.வெ.க., - காங் கூட்டணி? விஜய் வீட்டில் ஆலோசனை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது சிறப்பு நிருபர் -

தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சில் சுமுக முடிவு எட்டப்படாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.


இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் தொடருவதை, காங்., நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. இதனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தரப்பில் கடுமையாக முயற்சிகள் நடந்தன. ஆனால், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கனிமொழி ஆகியோர் தொடர்ச்சியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து பேசி வருவதால், கூட்டணி பேச்சை வெளிப்படையாக செய்ய முடியவில்லை.

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தலைமையிலான குழு, தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து சமீபத்தில் பேசியது. அப்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தி.மு.க., சொன்னதால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிருப்தியான காங்., மேலிடம், த.வெ.க.,வுடன் மீண்டும் பேச்சை துவங்கியுள்ளது.

அதன்படி, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, பிப்., 28-ம் தேதி டில்லி சென்று, காங்., மூத்த தலைவர் சிலரை சந்தித்து பேசினார்; தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி ஹைதராபாத் சென்றார். ஆந்திராவில் இருந்து அங்கு வந்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரையும் ஹோட்டலில் சந்தித்து பேசினார். இதனால் தான், மார்ச் 1ம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ஆதவ் பங்கேற்கவில்லை. அப்போது, வேணுகோபாலுக்கு போன் செய்த மாணிக்கம் தாகூர், அவருடன் ஆதவ் அர்ஜுனாவை பேச வைத்துள்ளார்.

'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்.,கில் பலரும் ஆர்வமாக உள்ளனர். கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை பெற தலைமையும் விரும்புகிறது. ஆனால், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மூலமாக, ராகுலுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது. தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், நிச்சயம் தலைமையும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பச்சைக்கொடி காட்டி விடும். எனவே, ஓரிரு நாட்கள் எங்களுக்காக காத்திருங்கள்' என வேணுகோபால் கூறியுள்ளார்.

இந்த தகவலை சென்னை திரும்பிய ஆதவ், விஜயிடம் கூறி உள்ளார். எனவே, இது குறித்து ஆலோசனை நடத்த, நீலாங்கரை வீட்டில் இருந்து, பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் நேற்று சென்றார். அங்கு விஜய், ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், காங்கிரசுக்காக ஓரிரு நாட்கள் காத்திருக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

Advertisement

மார் 03, 2026 06:02 pm

அரசனை நம்பி புருஷனை கைவிடப் போகிறது காங்கிரஸ்!

Reply Rate this
மார் 03, 2026 04:59 pm

Stalin is ஸ்கேர்ட். He will bootlick ராகுல், give 40 சீட்ஸ் and retain the alliance

Reply Rate this
மார் 03, 2026 03:12 pm

தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்த பிறகு தூக்கு மாட்டிக் கொண்டு செத்தால் என்ன தூக்க மாத்திரை சாப்பிட்டு செத்தால் என்ன?

Reply Rate this
மார் 03, 2026 03:08 pm

காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைப்பது அதுக்கு தானே குழி தோண்டி குழியில் உட்கார்ந்து மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம்.பாஜகவின் முத்து பாரத் நிறைவேற பாஜகவிடம் விலைபோன சில கைக்கூலிகள் தொடர்ந்து உளறி வருகின்றனர். இந்த தேர்தலோடு தமிழ்நாட்டில் பால் ஊற்றும் நிலையில் உள்ள காங்கிரஸ்க்கு சங்கு ஊதி சடங்கு செய்து சவப்பெட்டியில் வைத்து விடுவார்கள்.

Reply Rate this
மார் 03, 2026 02:58 pm

KAS too not in top steering committee ? Adhav and Arokiyam is cheating vijay for sure

Reply Rate this
மார் 03, 2026 02:37 pm

காங்கிரஸ் கட்சியில் திமுக அபிமானிகள் அதிகம்...முடிந்தவரை விலக மாட்டார்கள்

Reply Rate this
மார் 03, 2026 02:24 pm

உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திரு செங்கோட்டையன் இல்லையா ?

Reply Rate this
மார் 03, 2026 02:15 pm

எந்த வீட்டில் என்று சொன்னால் பத்திரிக்கையாளர்களுக்கு சௌகரியமாக இருக்கும். நீலாங்கரையா, பட்டினப்பாக்கமா?

Reply Rate this
மார் 03, 2026 12:32 pm

டிவிகே ல பூத் கமிட்டினா என்னன்னு தெரியல இதுல காங்கிரஸ் கூட்டணின்னா அவன் சாப்பிட்டு போயிடுவான் டிவிகே வ

Reply Rate this
மார் 03, 2026 11:53 am

நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள் கூட்டணி அமைய

Reply Rate this