Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


கூட்டணி அமையாவிட்டால் காங்.,கை உடைக்க தி.மு.க., திட்டம்?

கூட்டணி அமையாவிட்டால் காங்.,கை உடைக்க தி.மு.க., திட்டம்?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தி.மு.க.,வுடனான கூட்டணி முறிந்து காங்கிரஸ் வெளியேறினால், அக்கட்சியை உடைக்க தி.மு.க., திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2004 முதல் 22 ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. ஆனாலும், காங்கிரசுடன் சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் தி.மு.க., திணறி வருகிறது.

தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடித்து, தேர்தல் களத்தில் இறங்கி விட வேண்டும் என, ராகுலிடம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, கடந்த நவம்பர் 22ம் தேதியே ஐவர் குழுவை, காங்கிரஸ் தலைவர் கார்கே அமைத்தார்.

குறைத்து மதிப்பீடு


முன்கூட்டியே பேசினால் அதிக தொகுதிகளை கேட்டு, காங்கிரஸ் பிடிவாதம் பிடிக்கும். கடைசி வரை இழுத்துக் கொண்டே சென்றால், வேறு வழியின்றி கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ளும் என தி.மு.க., திட்டமிட்டது. ஆனால், 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் உறுதியாக நின்றது.
முதல்முறையாக கடந்த மாதம் 28ல் நடந்த பேச்சில், 2021ல் தந்த 25 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக தி.மு.க., கூறி உள்ளது. இதை ஏற்க மறுத்த கிரீஷ் ஷோடங்கர், 'குறைந்தது 30 தொகுதிகளையாவது தர வேண்டும். இதை தர மறுப்பது, காங்கிரசை குறைத்து மதிப்பிடும் செயல்' என கூறி உள்ளார்.
ஒரு தொகுதியைக்கூட அதிகமாக தர தி.மு.க., மறுப்பதால் கோபமடைந்த கிரீஷ், பேச்சு விபரங்களை வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 1971 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 205 இடங்களில் வென்றது. இந்த சாதனையை, வரும் தேர்தலில் முறியடிக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். கருணாநிதியால் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெல்ல முடியவில்லை.

ராகுலுக்கு தகவல்


இதை முறியடிக்க, இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது என்பது ஸ்டாலினின் கணக்கு. காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க மறுப்பதற்கு, இது தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால், வி.சி., போன்ற கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுக்க வேண்டியிருக்கும். இது, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது.

அதனால், கூட்டணி அமையாவிட்டால், காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவாளர்களை ஒன்று சேர்த்து, கடந்த 1996 சட்டசபை தேர்தல் போல அக்கட்சியை உடைக்க தி.மு.க., திட்டமிட்டு வருவதாக, கிரீஷ் ஷோடங்கர் வாயிலாக ராகுலுக்கு தகவல் சென்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட கோபத்தில் தான், ஸ்டாலினை, சகோதரர் என குறிப்பிடாமல், ராகுல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement

மார் 03, 2026 09:31 pm

காங்கிரஸ் கட்சி உடைவதற்கு இன்னும் என்ன இருக்கிறது?

Reply Rate this

காங் உடன் இருக்கும் வரைதான் உங்களுக்கு அரசியல் வாழ்க்கை திமுக , இல்லையேல் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகுவது போலத்தான் , இதை எழுதி வைத்துக்கொள்ளுங்க

Reply Rate this
மார் 03, 2026 04:34 pm

தமிழகத்தில் மிக பலம் பொருந்திய கட்சி. 400 தலைவர்களும், 200 தொண்டர்களும் உள்ள கட்சி. கட்சி பிளவு பட்டால் ஒரு தலைவருக்கு பாதி தொண்டர் என்ற முறையில் தொகுதி அல்ல தொண்டர் பங்கீடு நடக்க வாய்ப்பு அதிகம்.

Reply Rate this
மார் 03, 2026 12:19 pm

காங்கிரசை உடைப்பதால் ஒட்டு பிரியாது காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் கை சின்னம் மட்டுமே பார்ப்பர்

Reply Rate this
மார் 03, 2026 11:03 am

இந்த விஷயத்தில் பாஜக தான் எகஸ்பெர்ட். திமுகவுக்கு அனுபவம் போதாது!

Reply Rate this
duruvasar - indraprastham
தவறு. மதிமுகவை உடைத்தது, விஜயகாந் கட்சியை உடைந்தது, இப்படி பல கோப்பைகளை வாங்கி குவித்திருக்கிறது திமுக. அதிமுகவைத்தான் உடைக்க முடியாமல் செங்கலை பெயர்க்கும் வேலையை தற்சமயம் செய்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவை உபயோகியுங்கள்
மார் 03, 2026 12:02 pm
Rate this
கான் கிராஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள்.... உடைப்பதற்கு.... இருக்கும் நாலு பேரும்.. ஆளுக்கு ஒரு திசையில் போக போகிறார்கள்.. கான் கிராஸ் கட்சி.... கோவிந்தா..... கோவிந்தா
மார் 03, 2026 12:03 pm
Rate this
மார் 03, 2026 10:50 am

காங்கிரஸ் கட்சியை மேலும் உடைக்க என்ன இருக்கிறது. அது ஏற்கனவே ஒரு உடைந்துபோன கட்சிதான். மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்தான்.

Reply Rate this
மார் 03, 2026 10:35 am

திமுகவின் வழக்கமான பாணி இது ஏற்கனவே அல்லக்கைகளாக உள்ள காங்கிரஸ்காரர்கள் திமுகவுக்கு மாறி விட்டனர் என்று ஒரு போட்டோ சூட் நடத்தி விடுவார்கள். பிறகு அவர்களை அனாதைகளாக விட்டு விடுவார்கள்

Reply Rate this
மார் 03, 2026 09:50 am

அட பாவமே

Reply Rate this
மார் 03, 2026 09:38 am

என்னது ? காங்கிரசை உடைக்கறதா ?? முதல்ல எங்க இருக்கு ஒன்றுபட்ட காங்கிரஸ் ?? சத்தியமூர்த்தி பவன்ல ஒரு கூட்டம் வைங்க. அப்புறம் நடக்கற ரகலையை பாருங்க. அடல்ட்ஸ் ஒன்லி மாதிரி வெளியே ஓடி வருவாங்க. காங்கிரஸ் கொடியிலே இருக்கு. நெஜத்துல இல்ல. அப்புறம் எதுக்கு வீண் சவடால். பாஸ், ஒரு வெளிப்படையான தகவல். காங்கிரஸ் வேட்பாளர் தனியா நின்னாலே, யாருக்கும் அவரை தெரியாது.

Reply Rate this
மார் 03, 2026 09:06 am

காங்கிரஸ், விஜய், சீமான் கூட்டணிக்குதான் தேவ ஆசீர்வாதம் கிட்டும். ஜார்ஜ் பொன்னையா போன்றவங்க ஓட்டுப் பிச்சை கிடைக்கும்.

Reply Rate this