Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 நெல்லிக்காய் மூட்டை போல் தி.மு.க., கூட்டணி சிதறும்

 நெல்லிக்காய் மூட்டை போல் தி.மு.க., கூட்டணி சிதறும்

தமிழகத்தில், ரவுடியிசம் நிறைந்த தி.மு.க., ஆட்சி முடிய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்து சித்ரவதை செய்வதுதான் தி.மு.க., ஆட்சியின் பேஷன். திருப்பூரின் பனியன் தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கையால், அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தீர்ந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி வைரம் பாய்ந்த மரம் போல் வலுவாக இருக்கிறது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்குத்து, சண்டை சச்சரவு அதிகரித்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் தொடர, கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை காங்.,கில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நெல்லிக்காய் மூட்டையை பிரித்து கொட்டியதுபோல், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சிதறப் போகின்றன.

- ஜெயராமன். தேர்தல் பிரிவு செயலர், அ.தி.மு.க.,

Advertisement

பிப் 10, 2026 10:28 pm

கனவுகள் எல்லாம் பலிக்காது

Reply Rate this
பிப் 10, 2026 09:46 am

பாஜகவின் 20% கணக்கு.. 59 தொகுதிகளை கேட்க தயாராகும் டெல்லி.. எடப்பாடிக்கு எகிறும் நெருக்கடி

Reply Rate this
பிப் 10, 2026 08:48 am

ஒரு கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தான் அக்கட்சியின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும். 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட திமுக தனியாக போட்டியிட்டதில்லை. அதனால் திமுகவின் யோக்கியதை யாருக்கும் தெரியாது.

இது போதாதென்று, திமுக தெலுங்கு திராவிட கிறிஸ்தவ குடும்பத்தினர் வாரிசு அரசியல் கட்சியாக இருக்கிறது. அதனால், தெலுங்கர்களும், திராவிட கிறிஸ்தவர்களும் மட்டுமே திமுக பக்கம் செல்கிறார்கள். தூத்துக்குடி கிறிஸ்தவ நாடார்கள் மற்றும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் திராவிடர்கள் அல்லாத கிறிஸ்தவர்களும் திமுக பக்கம் போவது கிடையாது.

இந்த ரகசியம் தற்போது தான் அம்பலமானது. அதனால், ஒரு கட்சியும் திமுக பக்கம் போகவில்லை. திமுகவின் பின்புறம் உள்ள நிழலின் பக்கம் கூட போகவில்லை.

பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் நெல்லிக்காய் மூட்டையில் இருந்து சிறுவயது போல் சிதறும் என்று கூறுவது மற்றொரு கருத்தாக இருக்கிறது.

Reply Rate this
பிப் 10, 2026 07:58 am

நெல்லிக்காய் மூட்டைகள் எங்கேடா இருக்கிறது? கிராபிக்ஸ் விவசாயி எடப்பாடி பழனிசாமி கிடங்கிலா?

Reply Rate this