Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை

பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கத்தை அறிவித்துள்ள பா.ஜ., தலைமை, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், குறைந்தது 50 வீடுகளின் மாடியில், பா.ஜ, கொடியை பறக்கவிட உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில், வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் கேரளா தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., அல்லது கூட்டணியை வெற்றி பெற வைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா களமிறங்கி உள்ளார்.

ஓட்டுச்சாவடி பணிகளில், புதுப்புது வழிமுறைகளை கையாளும் பா.ஜ., ஐந்து மாநில தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பா.ஜ., ஓட்டுச்சாவடி கமிட்டி தலைவர், தனது வீட்டின் முன்பு, அனைவரது பார்வையில் படுமாறு, அவரது பெயர் பலகையை வைக்க வேண்டும். அதில் பெயர், ஓட்டுச்சாவடி கமிட்டி தலைவர் என்பது இடம்பெற வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும் உட்பட்ட பகுதியிலும், குறைந்தது 50 வீடுகளின் மாடியில், பா.ஜ., கொடியை பறக்க விட வேண்டும். ஓட்டுச்சாவடி கமிட்டி உறுப்பினர்கள், தங்கள் ஓட்டுச்சாவடியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும், குறைந்தது மூன்று முறையாவது சந்திக்க வேண்டும். தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என, பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பிப் 14, 2026 10:35 am

மதமாற்றம் செய்யும் மாடலை கடைபிடிக்க வேண்டும். எவ்வளவு ஏசினாலும் சினத்தை வெளியே காட்டாமல் அவர்களிடத்தில் அன்பாக பேசி நகரவேண்டும்.

Reply Rate this
பிப் 14, 2026 07:54 am

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலக நாடுகளிடையே நடக்கும் ஊழல் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

Reply Rate this
duruvasar - indraprastham
திமுக பைல்ஸ்ஸூம் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்கலாம்
பிப் 14, 2026 11:49 am
Rate this
பிப் 14, 2026 07:46 am

நீங்கள் கட்சியை வளர்கிறீர்களோ இல்லையோ DMK யை வீட்டிற்கு அனுப்புவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றினால் உங்களுக்கு நல்லது natakkum

Reply Rate this
பிப் 14, 2026 06:25 am

இது கிட்டத்தட்ட தீம்க்கா தலைமை பதவியை ஆத்தா தீம்க்காவில் இருந்து தாத்தா தீம்க்காவுக்கு தாவிய செபாவுக்கு கொடுத்து விட்டு கட்சி வளர்ந்து இருக்கிறது என்று தீம்க்கா நினைப்பது போலத்தான். அண்ணாமலைக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லாத நிலையில் பாஜகவினர் தமிழகத்தில் தீம்க்காவுக்கு கூட ஓட்டுப்போட வாய்ப்பு இருக்கிறது.

Reply Rate this
என்ன செய்ய? இப்போ எல்லாம் ரூ 5000 எதயும் செய்யும்?
பிப் 14, 2026 12:11 pm
Rate this