அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்
நமது நிருபர்
வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை மேற்கோள் காட்டி, ''அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு , அதிகாரத்திலும் பங்கு என்று திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் விமர்சித்து வருகிறார். அவர், ''கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது , அதிகார பங்கீட்டுக்கான நேரம் இது'' என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
அவரின் இத்தகைய தொடர் பேச்சுகள், கருத்துகள் திமுக தலைமையை சீண்டுவதாக அமைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், ''கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். உதயசூரியன் என்றால் தான் மக்கள் ஓட்டளிப்பர். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை.
ஆனால் முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு கிடையாது' என்று தெளிவாக சொல்லி விட்டார். வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும்'' என கூறியிருந்தார்.
ஆட்சியில் பங்கு
இதனை மேற்கோள் காட்டி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2021ல் 173ல் போட்டியிட்டு 133 வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம்.
ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். ஆட்சியில் அதிகார பகிர்வு அவசியம் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் மாணிக்கம் தாகூர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
Advertisement
ஆட்சி அதிகாரம் இவற்றில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லையே மாணிக்கம் தாகூர்?
இவர் யார் என்பது கூட்டணி ஜெயித்த பின்னர் தான் தெரிந்தது. இப்ப நல்ல சான்ஸ் உங்கள் தொ கிதியில் தனி யா கை சின்னத்தில் நீ போட்டிபோட்டு உன் கீர்த்தியை காட் டி வெற்றி பெற்று காட்டி அதிகாரத்தில் அமர்வாயாக. தனியாக வென்ற தாண்டவராயன் என்று புகழப்படு வாய்
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி இல்லை என்றால் திமுக எதிர்க்கட்சி நிலை அடைய முடியாது. திமுக எப்போதோ கம்யூனிஸ்ட் போல் தேய்ந்து இருக்கும். தமிழக காங்கிரஸ் முக்கிய பொறுப்புக்கு தாகூர் தகுதியானவர். காங்கிரஸ் தொண்டர்கள் குறைவு தான். ஆனால் நடுநிலை வாக்காளர் ஆதரவு அதிகம். ஆட்சி, அதிகார பங்கு அவசியம்.
போகிற போக்கை பார்த்தால் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் தாகூர் ஜன கன மன பாடிவிடுவார் போல் தோன்றுகிறது...
026 சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அக்னி பரீட்சை தான். பல மாநிலத் தேர்தல்களில் தோற்ற காங்கிரஸ் தமிழ்நாடு தேர்தலை தான் நம்பி உள்ளது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. திமுக கூட்டணிக்கு சென்றால் விஜய் ஆதரவு தலைவர்கள் புதிய கட்சியை உருவாக்குவார்கள் என்கின்றனர். அதே நேரத்தில் விஜய் கூட்டணிக்கு சென்றால் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் இணைந்து புதிய கட்சியை உருவாக்கும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர்.
You are very right Mr Tagore in what you ask for. Though you are holding the ground, you should have plan B.
மாக்கான் மாணிக்தாகூர்... பீகார் தேர்தலில்... உன் கட்சியின் டவுசர கழட்டிட்டு ஓடவிட்டானுங்க பாஜக...? அப்பகூடவா புத்தி வரலை...? மொத்தமே 6 எம்எல்ஏ.. சீட் ஜெயிச்சீங்க...? இன்னும் திருந்தலையா... ஒழுங்கா திமுக கொடுக்குற வாங்கிட்டு... அவனுங்க உன் கட்சி வேட்பாளரா ஜெயிக்க வைப்பானுங்க... அது டபுள் டிஜிட்டல்ல வரும்... ஒழுங்கு மரியாதையா கொடுக்குறத வாங்கிட்டு போ... இல்ல... என் தலைல நானே கொள்ளிக்கட்டைய வச்சி தேய்ச்சிக்கப் போறேன்னு... விஜய்கிட்ட போ... அவன் “கழுதை புட்ட கை நிறைய கொடுப்பான்”... வாங்கிட்டு எல்லா தொகுதியிலேயும் டிபாசிட் வாங்காம படுதோல்வி அடைஞ்சு... காங்கிரஸ்.. இந்தியாவிலேயே காணாம பண்ணிடாதே
நெஸ்ட் விடயம் என்னவாக இருக்கும் விஜய் கூட பொய் சேந்தால் காங்கிரஸ் கு ஆட்சியிலே பங்க கிடைக்கும். இல்ல நைனார் கிட்ட பேசுவாரோ .... என்ன மனசில இருக்குனு தெரியலே. குடுக்கமாட்டானு சொன்ன பின்னாடி ஏன் இவர் எப்படி பேசனாரு தெரியலே

எப்படியும் கொடுக்கப்போறது இல்லே. சும்மா கேட்கிறதா கேட்டு வைப்போமே என்ற நிலைதான்.
சட்டசபை தேர்தலில் காங்கிரெஸ்ஸை இழப்பது DMK விற்கு மிக பெரிய நஷ்டமாக முடியலாம். TVK விற்கு ஒரு பெரிய மனபலத்தை தரும். அப்படி TVK உடன் சேர்ந்தும் காங்கிரஸ் தோற்றால், 2029 மத்திய தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1 சீட் கூட வெற்றி பெற முடியாது. இது தான் காங்கிரஸின் பிரச்சனை.