'ரூ.5 ஆயிரம் தேர்தலுக்கான வித்தை' * சொல்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
மதுரை: ''முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் மகளிர் உதவித்தொகை தேர்தலுக்கான வித்தை. அரசு பணத்தில் ஓட்டு சேகரிக்கும் தி.மு.க.,வின் போக்கை தடுக்க தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்த வேண்டும்'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், போதை கலாசாரம், பணி நியமன ஊழல், விலைவாசி உயர்வால் அனைவரும்அதிருப்தியில் உள்ளனர்.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனை மடைமாற்ற ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
'கோடைகால நிவாரணம்' என்று ஒரு புதிய கரடியை முதல்வர் அவிழ்த்து விட்டுள்ளார்.இதனால் தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தி குறையாது. இதுபோன்ற அறிவிப்பு தேர்தலுக்கான வித்தை. அரசு பணத்தில் ஓட்டு சேகரிக்கும் தி.மு.க.,வின் போக்கு தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறும் செயல்.
இதனை உணர்ந்து தான்மதுரையில் நடந்த மாநாட்டில், தேர்தல் தேதிக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தமிழக நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏமாற்று அரசியலில் ஈடுபடும் தி.மு.க.,வின் முறைகேடுகளை தடுக்க தேர்தல் விதிமுறைகளை உடனே அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement

மத்திய அரசு கொடுக்கும் நிதி எப்படியோ உபயோக படுகிறது.