Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி

வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'த.வெ.க.,வில் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை' என, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க., சார்பில், போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை, பனையூர் அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி விருப்ப மனு வழங்கப்பட்டது. முதல் நாளே, 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. மனு வாங்க ஏராளமானோர் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 'மனு வாங்க நேரில் வர வேண்டாம். 'ஆன்லைன்' வழியே, மனு வாங்கிக் கொள்ளலாம்' என, கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில், விருப்ப மனு சமர்ப்பிக்க, 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

பொதுவாக எல்லா கட்சிகளிலும், தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்குதான் விருப்ப மனு வழங்கப்படும். மனு கட்டணமாக, 10,000 முதல் 15,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும். இதனால், குறைந்த நபர்களே மனு வாங்குவர். ஆனால், த.வெ.க.,வில் 100 ரூபாய் கொடுத்து விருப்ப மனு வாங்கலாம் என்றதும், ஏராளமானோர் சென்று மனு வாங்கினர்.
அதை பூர்த்தி செய்து கொடுக்கும்போது, பொதுப் பிரிவினர் 10,000 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேரில் வந்து 10,000 பேர், 100 ரூபாய் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றனர். 'ஆன்லைன்' வழியே, 40,000 பேர் மனுக்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மொத்தமாக 50,000 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். ஆனால், 5,000க்கும் குறைவான மனுக்கள்தான், பூர்த்தி செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு திரும்ப வந்துள்ளது. அதிலும், பல மனுக்களில் கட்டு தொகைக்கான வரைவோலை இணைக்கப்படவில்லை.

அதிர்ச்சி

மனு சமர்பிக்கும் பணியே முடியாத நிலையில், பல தொகுதிகளில், கட்சி நிர்வாகிகள் பலரும், 'நான் தான் வேட்பாளர்' எனக் கூறி தொகுதியை வலம் வருகின்றனர். இதற்கு தலைமையில் இருந்து, எந்த மறுப்பும் வரைவில்லை. இதனால், தேவையில்லாமல் விருப்ப மனுவுக்கு, 'நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்?' என, பலரும் விலகிவிட்டனர்.

இந்த விபரம் விஜயை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எனவேதான், மனுவை சமர்ப்பிக்க 20-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை சமர்பிக்காமல் இருக்கும் நிர்வாகிகளிடம், அவற்றை பெற்று, உடனே அனுப்பும்படி, மாவட்டச்செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement

பிப் 17, 2026 10:03 pm

முதல்வர் விஜய் தான் அவர் போட்டு இருக்கிற சட்டை மத்த கட்சியுடையது ரஜினி செந்தில் காமடி தான் ஞாபகம் வருகிறது அவரின் ஆட்சி அதிகாரம் பங்கு என்ற வாக்குறுதி என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்

Reply Rate this
பிப் 17, 2026 09:38 pm

வர்ரூம் .. ஆனா வராது

Reply Rate this
பிப் 17, 2026 09:13 pm

இதெல்லாம் Souvenirs எனப்படும் நினைவு பொருள். இந்த தேர்தலுக்கு பின் கட்சி இருக்காது

Reply Rate this
பிப் 17, 2026 09:02 pm

அடுத்த டார்ச் லைட்.

Reply Rate this
பிப் 17, 2026 02:17 pm

Half of them not an adult

Reply Rate this
பிப் 17, 2026 01:25 pm

எதற்கும் பழைய பேப்பர் கடைகளில் தேடுங்கள்... மொத்தமாக எடைக்கு போட்டு, அந்த காசும் டாஸ்மாக்குக்கு போயிருக்கபோகுது.

Reply Rate this
பிப் 17, 2026 12:39 pm

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பெரியார், சமத்துவம், சமூக நீதி இப்படி பீலா விட்டுட்டுட்டு வேட்பு மனு வாங்க எஸ்.சி எஸ் டீ அப்படின்னா ஐயாயிரம், மற்ற ஜாதிக்காரங்களுக்கு பத்தாயிரம் அப்படின்னு வேட்புமனு வை விக்கிறானுங்களே ஒரு தேர்தல் வேட்புமனுக்கே இப்படி வித்தியாசம் பாக்கும் இவங்கல்லாம் சமத்துவ சமூக நீதி பத்தி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு? இந்த லட்சணத்தில் பெரியார், அம்பேத்கர் அப்படின்னு பம்மாத்து வேற........

Reply Rate this
பிப் 17, 2026 12:21 pm

வேட்பாளர் தேர்வு லட்சணம் தெரிந்து விட்டது. ஓட்டு வங்கி லட்சணம் புரிந்து கொண்டு சுதாணாமா நடந்தால் மானமாவது மிஞ்சும்

Reply Rate this
பிப் 17, 2026 12:16 pm

இது அதிர்ச்சி அல்ல. தேர்தலுக்கு பின் வரும்

Reply Rate this
பிப் 17, 2026 11:20 am

விசில் ஊதணும்னா, உடனே வருவாய்ங்க.

Reply Rate this