அச்சம் இல்லை அச்சம் இல்லை; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவு
நமது நிருபர்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வரும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று (பிப்ரவரி 17) அச்சம் இல்லை. அச்சம் இல்லை என பாரதியாரின் பாடலை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது' என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டார். என்ன தவறு? ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் மாணிக்கம் தாகூர் போன்றோர் விடாப்பிடியாக உள்ளனர்.
'கூட்டணி நீடிக்க வேண்டுமானால், தி.மு.க.,வை தீவிரமாக விமர்சிக்கும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும்; அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற முடிவை எடுக்க நேரிடும்' என, காங்கிரஸ் மேலிடத்திற்கு, தி.மு.க., தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று அச்சம் இல்லை. அச்சம் இல்லை. அச்சமென்ப தில்லையே என பாரதியாரின் பாடலை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே 'எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், திருப்பி அடிப்போம். எம்.பி., எம்.எல்.ஏ., பதவி மண்ணாங்கட்டி பதவி' என மாணிக்க தாகூர் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வரும் நிலையில் இன்று இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
Advertisement
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும் போது ஆட்சியில் பங்கு என்று பேசினால் தான் பொருத்தமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆக மொத்தத்துல யார் முதுகிலையாவது ஏறி சவாரி செய்யணும்.. காங்கிரஸ் தனியா நின்னா டெபாசிட் வாங்குமா? தாகூர் MP எலேச்ஷன்ல ஜஸ்டு மிஸ்...
சாத்தூர் ராமச்சந்திரன் மீது உள்ள கோபத்தில் அவரிடம் மோத முடியாது என்பதால் அவரை பழிவாங்க காங்கிரஸ் கட்சியை பகடைக்காயாக பயன் படுத்துகிறார். பாவம் இந்த உண்மை தெரியாமல் ராகுல் இவருடைய பேச்சுக்கு மயங்கி தெருவில் நிற்க போகிறார். பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் உடன் சண்டைபோட்டு படுதோல்வி அடைந்தது போல தான் காங்கிரஸ் போக போகிறது
அது போல் தி மு க தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டலாம். ஸ்டாலினுக்கு அந்த தைரியம் உண்டா ?
அச்சமில்லை அச்சமில்லை என்று பேசும் மாணிக் தாகூர், MP பதவி மண்ணாங்கட்டி என்று சொல்லுபவர் DMK தயவால் வெற்றிபெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியாக அல்லது விஜய் உடன் சேர்ந்து போட்டி இட்டு வெற்றி பெற்றால் , உண்மையான வீரன் என்று எடுத்து கொள்ளலாம் . இல்லை என்றால் வாய் சொல்லில் வீரன் தான் .
திராவிஷமும் கான்-கிராஸ் ம் கூட்டுக.... மாணிக்கம் தாகூரை போன்ற சிறு கும்பல் தனியே பிரிந்து இன்னொரு பெயரில் இன்னொரு கான்-கிராஸ் கட்சியை ஆரம்பித்து தற்குறிகளோடு கூட்டு சேர்ந்து விடும்.. இதுதான் கடைசியில் நடக்கும்...
எந்த அரசியல் கட்சியிலும் இல்லாமல் எந்த அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் சுயேட்சை வேட்பாளராக 2026 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கிடைத்தால் அதன் பிறகு உன்னுடைய பிதற்றல்களை வெளியிடு மாணிக்கம் தாகூர்.

இங்கே வாங்கிய காசுக்கு மேலே கூவிய 200 ரூவா உடன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து நிரூபித்த அதிமுகவை போல் திமுக என்றைக்காவது தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்குமா? கூட்டணி இல்லாமல் திமுக என்றாவது தேர்தலில் நின்று ஜெயித்து காட்டுமா?