Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்

 காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''காங்கிரசின் நிலைப்பாடு பற்றி நான் கருத்து சொல்ல ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: லோக்சபாவில் எம்பிக்கள் சஸ்பெண்டை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை திரும்ப பெற வேண்டும் என்று எல்லா கட்சிகளும் வலியுறுத்தினோம். ஆனாலும் சபாநாயகர் அதற்கு உடன்படவில்லை.

எதிர்க்கட்சி எம்பிக்களை இதேபோன்று இடைநீக்கம் செய்வது, பேச விடாமல் தடுப்பது, எதிர்க்கட்சி தலைவரையே பேசவிடாமல் தடுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாஜ அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதனால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்டு அவையின் பொதுச் செயலாளர் இடம் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறோம்.

நம்புகிறோம்

அடுத்த மார்ச் 9ம் தேதி லோக்சபா கூடும்போது அது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று நம்புகிறோம். காங்கிரசின் நிலைப்பாடு பற்றி நான் கருத்து சொல்ல ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது என்ற ஒற்றை நிலைபாட்டில் உறுதியுடன் இருக்கிறோம்.
இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே இடைவெளி இருந்தாலும், முரண்பாடு இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்வோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி நம்புகிறது. இந்த கூட்டணி பாதிக்கப்படும் வகையில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தை கட்சி எடுக்காது. தேர்தலில் நாங்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்து பேச்சு வார்த்தையின் போது முடிவு செய்யப்படும்.

அழுத்தம்

பாமகவை கூட்டணியில் இணைப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் 2011ல் ஒரு நிலைப்பாட்டை எடுத்து விட்டோம். ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க தொடர்ந்து பாமக செயல்பட்டு வருவதால், அவர்களோடு நாங்கள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள இயலாது என்பதை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.
தற்போது திமுக தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டிய அதிகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உண்டு. நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. அப்படி அழுத்தம் கொடுக்கவும் மாட்டோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement

பிப் 15, 2026 06:58 pm

This election will not be like earlier elections because TVK will split the votes of every,nothing can be predicted now

Reply Rate this
பிப் 15, 2026 06:32 pm

பாவம் இவருக்கு எதற்குமே சரிப்பட்டு வர மாட்டார் போல. கடைசி வரை பிளாஸ்டிக் சேர் மற்றும் தேர்தல் சமயத்தில் செலவுக்கு பணம்.

Reply Rate this
பிப் 15, 2026 04:58 pm

திருட்டு புளிச்சமாவு திரு மாவை தொண்டர்களெ கைய்ய விட்டு விஜையின் பக்கம் போகிறார்கள். ஸ்டாலினிடம் கைய்யேந்துங்கள் என்று ஏந்தி கொண்டிருக்கிறார்.

Reply Rate this
பிப் 15, 2026 04:20 pm

ராமதாஸ் ஜாதிகட்சியாம், இவங்க தலித் சமூகத்திற்கு மட்டும் பாடுபடும் தேசிய கட்சி. இவர்களை ராமதாஸ் மற்றும் திருமாவளவன் புறக்கணித்தாலே ஜாதிகள் ஒழிந்து விடும்.

Reply Rate this
பிப் 15, 2026 04:17 pm

பாமக ஜாதி கட்சியாம் , சொல்வது யார் . அவர் யோக்கியதை என்ன

Reply Rate this
பிப் 15, 2026 03:32 pm

இன்னுமா இவரை ஜனங்கள் நம்புறாங்க.

Reply Rate this
பிப் 15, 2026 03:28 pm

காங்கிரஸ்க்காரர்கள் சில பேர் சூடு சொரணை இருப்பவர்கள்

Reply Rate this
பிப் 15, 2026 03:24 pm

இவர் கட்சி ஜாதி கட்சி இல்லை. என்ன விளக்கம்?

Reply Rate this
பிப் 15, 2026 03:22 pm

போடுவதை வாங்கிக்கொண்டு போவோம்... இரண்டு சீட்டே ச்சீட்டாஸ்க்கு பெரிய விஷயம்... திருமா பம்மல்

Reply Rate this
பிப் 15, 2026 03:19 pm

கான்கிராஸ் நிலைபாட்டில் நான் சொல்லுவதற்கு எதுவுமில்லை. ஆனால் என்னைப் பார்த்து கான்கிராஸ் நிறைய கத்துக்கணும்.

Reply Rate this