Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


திமுகவை மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி

திமுகவை மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி

சென்னை: திமுகவின் தவறுகளுக்கு நாங்கள் பழி சுமந்தோம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அக்கட்சி நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி, மகளிர் உரிமைத்தொகை வெற்றியை உறுதி செய்வது என நம்புவது மூட நம்பிக்கை எனக்கூறியுள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், தி.மு.க., தலைமையில் அமையும் ஆட்சியில், தங்களுக்கும் பங்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியின் மேலிட தலைவர்களும், இக்கோரிக்கையை இடைவிடாது கூறி வருகின்றனர்.

இது தமிழகத்தில் ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனயைடுத்து திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் எம்எல்ஏ தளபதி ஆகியோர், காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் மீண்டும் திமுகவை விமர்சித்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டத்தில் விருதுநகர் தொகுதி எம்பியும், ராகுலுக்கு நெருக்கமானவருமான மாணிக்கம் தாகூர் பேசியதாவது:

தைரியம்

லோக்சபாவில் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் ஏழு பேர் காங்கிரசார். மற்றொருவர் கம்யூனிஸ்ட். பார்லிமென்டில் யார் பலமாக சண்டை போடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம் என சொல்பவர்கள் சஸ்பெண்ட் ஆகாமல் இருப்பது ஏன் என அனைவருக்கும் தெரியும். உண்மையாக,பாஜவை எதிர்க்கும் தைரியமும்,தில்லும் காங்கிரசுக்கு மட்டும் தான் உண்டு. தைரியமாக இருப்பவன் காங்கிரஸ்காரன். அன்போடு, மரியாதையோடு எங்களை நடத்தினால், அன்போடு மரியாதையோடு இருந்து இருக்கிறோம். எங்களை எதிர்த்து அவமானபடுத்தி கீழ்த்தரமாக பேச நினைத்தவர்கள் அனைவரையும் அதேமொழியில் பதில் தந்தவர்கள் தான் காங்கிரஸ்காரர்கள்.

மரியாதை வேண்டும்

நம்மை பொறுத்த வரை மரியாதை தான் கேட்கிறோம். சொத்து, சுகத்தை கேட்கவில்லை. மரியாதை தான் கேட்கிறோம். அன்பு, மரியாதை நாங்கள் என்ன கொடுக்கிறோமோ அதைத்தான் கேட்கிறோம். திமுக மாவட்ட செயலாளர் ஒருவர், '' காங்கிரஸ் கட்சிக்கு பூத்தில் ஆள் இருக்கிறதா, காங்கிரஸ் கட்சி 3 ஆயிரம் ஓட்டு வாங்கி இருக்கிறது'' என பொதுவெளியில் , பத்திரிகையாளர்களை வைத்து கொண்டு பேசும்போதுதான் வருத்தம் வருகிறது.அது போதாது, அமைச்சர் ஒருவர் ' காங்கிரஸ் கூட்டணி வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்' என்பதும், அல்லது மற்றொரு அமைச்சர்,' அதெல்லாம் பார்த்துகொள்வோம். தலைவர் முடிவு செய்து கொள்வளார்' என அசால்ட்டாக பேசுவதும் தான் வலியை தருகிறது.நாங்கள் உங்களுடன் இருந்து நீங்கள் செய்த பல தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். நீங்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் பழி சுமந்தோம். நாங்கள் உங்களிடம் கேட்பது மரியாதை தான்.

ராகுல் எண்ணம்

முதல்வரை மூத்த சகோதரர் என ராகுல் அழைக்கிறார். இதற்கு அர்த்தம் தெரியாமல் ராகுல் பேசவில்லை. காங்கிரஸ்காரர்கள் சாதாரண வார்த்தைதான் பேசுவோம். நமது தலைவர், நம்பிக்கையோடு அன்போடு முதல்வரை சகோதரர் என அழைக்கிறார். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். கீழ் உள்ள சகோதரர்களுக்கு அதே மரியாதை வேண்டும் என்பது தான் ராகுலின் எண்ணம். கிளை செயலாளர்கள், நிர்வாகிகளுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என ராகுல் விரும்புகிறார். தனக்கு கிடைக்கும் மரியாதை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்.

நடவடிக்கை இல்லை

சிலர் தவறு செய்கிறார்கள். திமுக மாவட்ட செயலாளர் தளபதி பேச்சு வருத்தம் அளிக்கிறது. இதற்கு எதிராக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஜன.,26 ல், தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 20 நாள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதனால் அனைவரும் பேசுகிறார்கள்.

ஒரு மா.செ., பேச ஆரம்பித்தார். எல்லா அமைச்சர்களும் பேசுகின்றனர். காங்கிரசை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசுகின்றனர். இதை கேட்டுக் கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது.


இதற்கு கருத்து எல்லாம் சொல்வோம். மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம். அதே வார்த்தையை பேசுவோம். காங்கிரஸ்காரனுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி மரியாதை கொடுப்போம்.

மதுரை வடக்கு வேண்டும்

நம்மிடம் ஆள் இல்லை என சொல்பவர்களின் வாயை மூட வேண்டும் என்றால்,நமது பலத்தை காட்டவேண்டும். நம்மிடம் காசு இல்லாமல்இருக்கலாம். பிரியாணி கொடுக்க காசு இல்லாமல் இருக்கலாம். வடை, டீ கொடுக்க காசு இருக்கு.வடை டீயில் வண்டி ஓட்டுவோம். நடப்பது தன்மானத்தை காப்பதற்காக. காங்கிரசில் ஆள் இல்லை என சொல்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும்.

மதுரை வடக்கு தொகுதியை வாங்கியே ஆக வேண்டும் என கார்கேயிடம் கூறினேன். எந்த தொகுதி வருகிறதோ இல்லையா மதுரை வடக்கு தொகுதியை வாங்கியே ஆகவேண்டும். இதுதான் லட்சியம். வெற்றி பெற்று ஆக வேண்டும். இந்த தொகுதியில் இருந்து காங்கிரஸ்காரர் எம்எல்ஏ ஆக செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூட நம்பிக்கை

இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது : மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது . ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன எனக்கூறி பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Advertisement

பிப் 15, 2026 07:33 pm

காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் வெற்றி இல்லை. உங்கள் உரிமையை விட்டு கொடுக்காதீர்கள்.

Reply Rate this
பிப் 15, 2026 06:56 pm

காங்கிரஸ் தவேகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் 60 சீட்கள் வரை வெல்ல வாய்ப்புண்டு.

Reply Rate this
பிப் 15, 2026 06:52 pm

This Manickam guy cant win even a Panchayat member election without DMKs help and he should be defeated in all future elections

Reply Rate this
பிப் 15, 2026 04:49 pm

கூட்டணி ஏற்பட்டாலும் இரு கட்சியும் உள்குத்து செய்யும். இதில் பெரிதும் இழப்பது காங்கிரஸ் கட்சிதான்.

Reply Rate this
பிப் 15, 2026 04:39 pm

ஆக ஜோசப் உடன் செல்வதற்கு தயாராகி விட்டார்கள் தாய்க்குலமும் ஜோசப்பும் இந்திய கொள்ளை கூட்ட கட்சி.

Reply Rate this
பிப் 15, 2026 04:05 pm

மாணிக்கம் மட்டும் தான் விட்டு தராமல் அரசியல் செய்கிறார்

Reply Rate this
பிப் 15, 2026 04:02 pm

அவங்க தான் மரியாதை, சீட்டு, ஆட்சியில் பங்கு எதுவும் கிடையாதுன்னு பளிச்சின்னு சொல்லிட்டங்களே. நீங்க தான் வேற வழியில்லாம கெஞ்சிகிட்டு இருக்கீங்க. இதுக்கு அப்புறம் கூட்டணி உறுதியானால் கூட நோ யூஸ். இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு தான் என்பது ஏன் மண்டைகளுக்குபுரியவில்லை.

Reply Rate this
பிப் 15, 2026 02:57 pm

மரியாதை கொடுங்க, மரியாதை கொடுங்க, மரியாதை கொடுங்க, காங்கிரஸ் இப்படி தரம் தாழ்ந்து கெஞ்சுவது அந்த கட்சிக்கு அழகல்ல. இந்த தேர்தலில் தோல்வியை அடைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம். மதியாதார் தலைவாசல் மிதிக்காதே.

Reply Rate this
விட்டா கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மேடை போட்டு உக்காந்து அழுவார்கள் போல் தெரிகிறது!
பிப் 15, 2026 06:08 pm
Rate this
பிப் 15, 2026 02:53 pm

காங்கிரஸ் இல்லாமல் திமுக மெஜாரிட்டி பெற முடியாது..
அதனால் ஆட்சியில் பங்கு என்பது நியாயமான கோரிக்கைதான்.

Reply Rate this
same applicable to AIADMK.but why no demand from BJP?
பிப் 15, 2026 03:23 pm
Rate this
raja - Cotonou
காங்கிரஸ் காரன் கேட்கிறான் 2கி ஆள் ஆட்சியை இழந்து இன்று கட்டெரும்பாகே தேய்ந்து விட்டதால் கெடிரான் பிஜேபி அப்படி எதுவும் டிமாண்ட் செய்யாமல் கூட்டணி மட்டும் போதும் என்கிறார்கள்.. இதெல்லாம் சமச்சீர் படித்து கூமுட்டை ருவா 200 கூலிக்கு மாரடிக்கும் குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் தெரியாததால் தான் ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி...
பிப் 15, 2026 04:16 pm
Rate this
பிப் 15, 2026 02:46 pm

தமிழக காங்கிரஸ் கட்சி, ஒரு காலத்தில் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, இன்று அடிமைச் சேவகம் செய்யும் நிலைமையில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம் என்ற ஒன்று இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து இந்நேரம் விலகி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு வீண் சவடால் பேச்சு எதற்கு?

Reply Rate this