Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் ஆக தம்பிதுரை மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஞ்சிய இரண்டு இடங்கள் தேமுதிகவுக்கும், காங்கிரசுக்கும் திமுக வழங்கிவிட்டது.

இந்நிலையில், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் தம்பிதுரை மீண்டும் களமிறங்குவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2020 ல் ராஜ்யசபாவுக்கு தேர்வான அவர், 1984, 1989, 1998, 2009, 2014 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனார். மத்திய இணை அமைச்சராகவும், லோக்சபா துணை சபாநாயகர் ஆகவும் பதவி வகித்துள்ளார்.

அதிமுகவுக்கு கிடைக்கும் 2வதுஇடத்தை பாமகவுக்கு வழங்குவதாக இபிஎஸ் கூறியுள்ளார். அக்கட்சி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மார் 05, 2026 11:46 am

79 வயது தம்பிதுரையை விட்டால் அதிமுகவில் வேறு ஆட்களே இல்லையா?

Reply Rate this
மார் 05, 2026 07:24 am

அதிமுகவின் ஆஸ்தான நிலைய வித்வான் இவர் தான், இவரை விட்டால் வேறு ஆளே இல்லை!

Reply Rate this
மார் 05, 2026 07:22 am

அதிமுகவின் ஆஸ்தான நிலைய வித்வான் இவர் தான், இவரை விட்டால் வேறு ஆளே இல்லை!

Reply Rate this
மார் 04, 2026 11:37 pm

அதிமுக சார்பில் மக்களவைக்கோ மாநிலங்களவைக்கோ செல்லும் கடைசி உறுப்பினர் இவராகத் தான் இருக்கப் போகிறார்... 2026 தேர்தல் என்பது அதிமுக என்னும் கட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதப் போகும் தேர்தல்...

Reply Rate this
மார் 04, 2026 10:09 pm

மறைமுகமாக பிஜெபிக்கு எதிராகவே பேசுவார்.

Reply Rate this
மார் 04, 2026 10:06 pm

திரும்ப திரும்ப இவிங்களே பதவிக்கு வருவாங்க.

Reply Rate this
கட்சிக்கு பாடுபட்ட சாதாரண கட்சி தொண்டர் ஒருவரை ராஜ்ஜியசபைக்கு
தேர்ந்தெடுத்து அனுப்பினால் சரி.
இபிஎஸ் தன்னை நினைத்தால் சரி.
மார் 05, 2026 03:54 pm
Rate this