பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டம்
சென்னை: கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடிப்பதால், இரு பிரிவாக செயல்படுகிறது. இதில் அன்புமணி தரப்பு, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இணைந்து விட்டதால், அந்த கூட்டணிக்கு ராமதாஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தி.மு.க., கூட்டணியில் ராமதாசை சேர்க்க, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால், பா.ம.க., - வி.சி., தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்பதாலும் வி.சி., தலைவர் திருமாவளவன் எதிர்ப்பாலும், ராமதாசை கூட்டணியில் சேர்க்க தி.மு.க., தயங்குகிறது.
எனவே, நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் ராமதாஸ் தரப்பு, கூட்டணி பேச்சு நடத்தியது. ஆனால், 'பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்' என பலர் எச்சரித்ததால், த.வெ.க.,வும் ராமதாசை சேர்க்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராமதாசை குறைந்தது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வைக்க, தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது. அப்படி செய்தால், ராமதாஸ் விரும்பும் ஒன்றிரண்டு நபர்களை வெற்றி பெற வைக்கிறோம் எனவும், தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ராமதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, போட்டி போடுகின்றனர். ஆனால், தன்னை யாரும் கண்டுகொள்ளாதது, ராமதாசுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
எனவே, அ.தி.முக., கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகள் உட்பட 30 தொகுதிகளில், தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
தி.மு.கவின் பேச்சைக் கேட்டு இவர் இதை செய்தால். பெரும் கேடாக ராமதாசுக்கு முடியும்! இவரது அரசியல் வாழ்வே அஸ்தமமாகிவிடும்.
பாமக தலைவர் ராமதாஸை அக்கட்சியில் உள்ள அவரது பேரன்களான முகுந்தன், சுகந்தன் மற்றும் ஜி.கே.மணி போன்றவர்கள் தவறாக வழிநடத்தி கடைசியில் அவரை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தி விட்டார்கள். இனிமேல் மருத்துவர் ராமதாஸ் மீள்வது கடினம்! பெரும்பாலான அதாவது 90% சதவீத பாமகவின் கட்சியினர் அவரது மகனான அன்புமணியிடமே இருக்கிறார்கள்.
நெடுஞ்செழியன் தனது தலைமையில் ஒரு கட்சி ஆரம்பித்து அவரே மயிலாப்பூர் தொகுதியில் வெறும் 500 ஓட்டு வாங்கி தோற்றார். இவருக்கும் அந்த கதிதான்.

வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்யும் மனது மிகவும் நல்ல விசயம்