போலீஸ் துறையை முழுமையாக சீரமைக்கணும்: காங்., -- எம்.பி.,
சிவகங்கை: 'தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க, போலீஸ் சீர்திருத்த கமிஷன் துவங்க வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தியின் அலுவலகம், காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் உள்ளது.
இங்கு, மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசி விட்டு தப்பினர்.
இது போல, மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்பவர், போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவு:
தமிழகத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து நடை பெறும் பிரச்னையாக உள்ளது.
தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் அவசியம். இத்துறையை முழுமையாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை, அனைவருக்கும் உளவியல் ரீதியான மதிப்பீடு மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு போலீஸ் சீர்திருத்த கமிஷன் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்