அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஜெ., பிறந்த நாளில் வெளியிடும் பழனிசாமி
- நமது நிருபர் - மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் 24ல், சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
வழக்கமான அரசியல் வியூகங்களுக்கு அப்பாற்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிடும் தனி பாணியை கையாண்டார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
வளர்பிறை அஷ்டமி, பஞ்சமி திதி நாளில் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அந்நாளை பின்பற்றி வந்தார் ஜெயலலிதா. அது, பல தேர்தல்களில் அவருக்கு கைகொடுத்து உள்ளது.
அவருடைய பாணியில் தற்போது, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24யில், முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை வெளியிட முடிவெடுத்துள்ளார் பழனிசாமி.
சில நாட்களுக்கு முன்னதாகவே பட்டியலை தயார் செய்துவிட்ட பழனிசாமி, திருப்பதி சென்று பெருமாளை தரிசித்தபோது, பெருமாள் திருவடியில் வைத்து தரச்சொல்லி, அதை பெற்று திரும்பி இருக்கிறார்.
வரும் பிப்., 24, ஜெ., பிறந்த நாள் மட்டுமல்ல; வளர்பிறை அஷ்டமி நாளும் கூட. அதன் காரணமாகவே, அந்த நாளை தேர்வு செய்திருக்கும் பழனிசாமி, தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்