Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


அதிமுக, பாஜ இடையே தொகுதி பங்கீடு எப்போது: நயினார் நாகேந்திரன் பதில்

அதிமுக, பாஜ இடையே தொகுதி பங்கீடு எப்போது: நயினார் நாகேந்திரன் பதில்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: அதிமுக. பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மார்ச் 11ல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி;

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. காலம் உள்ளது. தொகுதி பங்கீடு சம்பந்தமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் மிகப்பெரும் எழுச்சியை தந்திருக்கிறது. இங்கு நடைபெறுகிற ஒரு காட்டுத்தர்பார் ஆட்சி, கஞ்சா ஆட்சி, பெண்கள், சிறு குழந்தைகள் நடமாட முடியாத ஆட்சி தான் இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
கஞ்சா பயன்படுத்திவிட்டு சாலையில் வருவோர், போவோர் எல்லாம் வெட்டப்படுகின்றனர். தினசரி ஏதோ ஒரு இடத்தில் இந்த சம்பவம் நடக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. திருநெல்வேலி அருகே கும்பகோணம் அருகே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது.
சொத்து வரி, மின் கட்டணம் 300 மடங்கு அதிகம். சிறு, குறு தொழில் செய்வோருக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் ஏதோ ஒன்றிரண்டை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யவில்லை.
ரூ.1000 தரேன் என்று சொன்னார்கள். 28 மாதங்கள் ஆகியும் தரவில்லை. தேர்தல் வந்தவுடன் தருகின்றனர். பொங்கலுக்கு போன வருடம், அதற்கு முந்தைய வருடம் தரவில்லை... இப்போது தான் தருகின்றனர்.
ஆனால் இப்போது கோடை கால விடுமுறை என்று ரூபாய் தருகின்றனர். காரணம்... ஓட்டுக்காக. மக்கள் இதை எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சி மாற்றம் உறுதி என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியில் கூறினார்.

Advertisement

மார் 07, 2026 06:36 am

இதைப் போன்ற அறிவு இல்லாதவர்கள் எல்லாம் மாநில தலைவராக வந்தால் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும். அருமையாக சென்று கொண்டிருந்த அண்ணாமலையை காலை வாரி விட்ட இந்த அயோக்கியர்கள் அழிக்கப்படுவார்கள், குஷ்பூ உட்பட.

Reply Rate this
மார் 06, 2026 10:51 pm

ஜெயிக்கணும்னு அறிவு இருந்தால் தொகுதி பங்கீடு முடிந்து போய் இருக்கும். இந்த எடப்பாடி நன்றாகவே தெரியும் dmk வலிமையாக உள்ளது ஜெயிப்பது கடினம் என்பது நன்றாகவே தெரிகிறது. கட்சியாவது கை விட்டு போகாமல் இருக்க அதுக்கு வேண்டிய vellyai செய்து கொண்டு இருகிறார். யார் கண்டது இந்த நயினார் கூட தோற்கடிக்க படலம்.

Reply Rate this
மார் 06, 2026 10:25 pm

விளக்கெண்ணைபோல வழவழ கொழுக்கோழ என்று இருந்தால் தேர்தலே முடிந்து இருக்கும். நன்றாக செயல் பட்டுக்கொண்டு இருந்த அண்ணாமலையை தொலைக்க பாடுபட்ட புண்ணியவான்கள். சந்தோஷமாக இருப்பார்கள்.

Reply Rate this
மார் 06, 2026 10:07 pm

இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் இதற்கு எங்கே நேரம் உள்ளது? திமுக அரசைக் குறை சொல்லவே நேரம் போதவில்லையே!

Reply Rate this

ஐயாவை நம்பி இறங்கிய பாஜக வுக்கு இந்தத் தேர்தல் மிகவும் கடினம்.

Reply Rate this