Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கிசு கிசு-1

 கிசு கிசு-1



திட்டங்கள் தொடரட்டும்! சூரிய கட்சித் தலைவரை, சமீபத்தில் தமிழக அரசு துறைகளின் தலைவர்கள் ரகசியமாக சென்று சந்தித்தனராம். அப்போது, துறை வாரியாக நடந்து கொண்டிருக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், 'தேர்தல் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம். எந்த அரசு வந்தாலும், நம் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் தொடர வேண்டும். அதனால், நிலுவையில் இருக்கும் திட்டங்களையும் தள்ளிப்போடாமல் செயல்படுத்துங்கள்' என அறிவுரைத்து அனுப்பினாராம்.



எந்த சாயமும் இல்லை தேர் தல் கமிஷன் உத்தரவு ப் படி, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் புதிய காக்கித் தலைவர், உத்தரவு வந்தவுடனேயே பொறுப்பேற்று கொண்டாராம். அவருக்கு கீழ் உள்ள காக்கி அதிகாரிகள், மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தனராம். அப்போது, 'தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டவர் என்பதால், எனக்கு எந்த சாயமும் கிடையாது. அதனால், எல்லோரும் நடுநிலையோடு செயல்படுங்கள்' என கேட்டு கொண்டாராம்.



குவியும் புகார்கள் தாமரை கட்சியின் புதிய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் இருவரும் சேர்ந்து வேட்பாளர் பட்டியல் தேர்வில் நிறைய குளறுபடிகளை செய்து விட்டனராம். கிடைத்திருக்கும் தொகுதிகளில் நல்ல வேட்பாளரைப் போடாமல் செய்து விட்டதாக கட்சிக்குள் பெரும் குமுறல் இருக்கிறது. 'இந்த தொகுதியில் இந்த வேட்பாளரைப் போட்டதாலேயே கட்சி தோற்கும்' என ஆதாரங்களோடும் புள்ளி விபரங்களோடும் கட்சியினர் பலரும், தேசிய தலைமைக்கு புகார்களை குவிக்கின்றனராம்.*

Advertisement