Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல்வர் விளக்கம் அளிக்கணும்; அண்ணாமலை வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல்வர் விளக்கம் அளிக்கணும்; அண்ணாமலை வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் ஏன் அதிகாரிகளைப் பேசவைத்து பின்னால் மறைந்து கொள்கிறார்? தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: நேற்றைய தினம், தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது திமுக அரசு.
ஆனால் அந்தத் தகவல்களைச் சரிபார்த்தால், தமிழக அரசு இந்த அதிகாரிகள் மூலம் கூறிய, 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை நாம் நம்ப முடியாது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியும்.
கடந்த 2021ம் ஆண்டில் NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் 1686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் நேற்றைய தினம் உள்துறை செயலாளர் கூறும்போது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குகள் எண்ணிக்கை 1597 என்று குறைத்துக் கூறியிருந்தார்.

அதாவது, ஏற்கனவே திமுக அரசு தானே சமர்ப்பித்து, தேசிய அளவில் வெளியிடப்பட்ட 2021 புள்ளிவிவரங்களில் இப்படித் தவறான எண்ணிக்கையைக் கூறும்போது, இதுவரை சமர்ப்பிக்காமல் திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்?

ஏற்கனவே வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இவர்கள் மாற்றிக் கூறும்போது, இன்னும் வெளியிடப்படாத 2024, 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் உண்மையா என்ற சந்தேகம் எழுகிறது. முக்கியமாக, உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதல்வர் ஸ்டாலின் ஏன் அதிகாரிகளைப் பேசவைத்து பின்னால் மறைந்து கொள்கிறார்?

இந்த முக்கியமான விஷயங்களில் பதில் சொல்ல வேண்டியது அதிகாரிகள் அல்ல, முதல்வர் தான். தமிழக மக்களுக்கு நேர்மையான விளக்கத்தை வழங்குவது அவருடைய பொறுப்பு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

மார் 13, 2026 07:24 pm

விவேக் ஒரு படத்தில் சொல்வது போல , அடுத்த rape க்கு அட்வான்ஸ் ரூ 2000 ஏற்கனவே கொடுத்தச்சு . திமுக வாக்காளர்கள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது . அண்ணாமலை பேச்சை கேட்டு ரோஷம் கொள்ளாதீர்கள்.

Reply Rate this
மார் 13, 2026 03:03 pm

மற்றவர் இந்நாளில் செய்த பாலியல் வன்கொடுமைக்கு திரு.ஸ்டாலின் எப்படி விளக்கம் அளிப்பார்?

Reply Rate this
மார் 13, 2026 02:44 pm

உலகளவில் மிக அதிகமான டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதற்கிடையே மக்கள் இதுபோல டேட்டா யூஸ் செய்வதற்கும் தனியாக வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் துறைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்டர்நெட் பயன்படுத்த கூட தனி வரி? ஆலோசிக்கும் மத்திய அரசு.. அப்போ ரீசார்ஜ் கட்டணம் எகிறுமே. அடுத்த ஆப்பு ரெடி இதை பேசு ஓசி சோறு

Reply Rate this
தியாகு - கன்னியாகுமரி
ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், இப்படி ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது. அதெப்படி கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் இப்படியெல்லாம் உருட்ட முடியுது?
மார் 13, 2026 03:01 pm
Rate this
Modisha - Chennai
Min கட்டணம் , சொத்து வரி , சாலை வரி , இன்ன பிற வரிகள் எல்லாம் திமுக ஏத்திடுச்சு , அத்யாவசிய பொருள் விலை ஏறிடுச்சு . இது எல்லாம் ஓகே , டேட்டாஉக்கு ஒரு வரி போட்டா கட்டு அடிமையே .
மார் 13, 2026 07:28 pm
Rate this
மார் 13, 2026 02:42 pm

சிகப்பு கம்பளம் விஜய்க்கு விரித்த பாஜக.. YES சொல்வாரா?

Reply Rate this
மார் 13, 2026 02:30 pm

நீயெல்லாம் ஒரு ஆளு... உனக்கு விளக்கம் சொல்ல ...

Reply Rate this
தியாகு - கன்னியாகுமரி
உதவாநிதியை விடவும் இவர் மேலானவர்தான்.
மார் 13, 2026 02:38 pm
Rate this
சீனுவுக்கே வெறும் இருநூறு தான் கொடுக்குரங்கா
மார் 13, 2026 07:51 pm
Rate this
மார் 13, 2026 02:24 pm

இதைப்பத்தியெல்லாம் பேசவே தெரியாது

Reply Rate this
மார் 13, 2026 02:17 pm

எல்லாமே பொய் கணக்குகலைதான் திமுக காண்பிக்கிறது.. கொரானாவுக்கு முன் ஆளுக்கு ஒரு கோடி தரவேண்டும் என்ற இதே கட்சி ஆட்சிக்கு வந்ததும் கொரோவால் இறக்கவில்லை வயிறு வலியால்தான் இறந்தார்கள் என்று certificate கொடுக்க சொல்லி ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சொல்லிவிட்டார்கள். முன்பெல்லாம் ஒருவரை கொல்ல காசு கொடுத்து ரவுடியை ஏவிவிடுவார்கள் ஆனால் இப்போது அரசு செலவில் போலீசை ஏவிவிட்டு சிம்பிளாக கொல்கிறார்கள். இதன் பின்னும் இந்த கட்சிக்கு முட்டு கொடுத்து அண்ணாமலையை விமர்சிப்பவர்கள்...

Reply Rate this
மார் 13, 2026 02:08 pm

முதல்வர் வேட்பாளராக வரக்கூடிய தகுதியுள்ள அண்ணாமலையை ஜாதிய மற்றும் பொறாமை அரசியலால் திட்டமிட்டு ஓரம் கட்டவேண்டியது, புதிய தலைவர் இன்னமும் திராவிட சிந்தனைகளுடன் இருந்துகொண்டு எடுபடாமல் போனதும் மீண்டும் அண்ணாமலையை மையப்படுத்தி செய்திகள் போட வேண்டியது. தமிழக அரசியலுக்கு தனிநபர் தலைமை பண்புதான் ஒத்துவரும். கொள்கை, சித்தாந்தம், தேசிய நீரோட்டம் இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இதுகூட தெரியாமல் பாஜக டெல்லி தலைமை இருக்கிறது. என்னத்த சொல்ல. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.

Reply Rate this
மார் 13, 2026 01:48 pm

48% DMK 36.2%, அதிமுக 13.6%..JOESPH உடைத்து சொன்ன சர்வே தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி சுமார் 70 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தபட்சம் 30000 பேரிடம் மாதிரி கணக்கெடுப்பு செய்யப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.. அண்ணாமலை சும்மா கதறாதே ஓரமா உட்கார்

Reply Rate this
நம்பிட்டோம்
மார் 13, 2026 02:05 pm
Rate this
நீ முதலில் குடும்பதோட அறிவாலய வாசலில் வரிசையில் போயி நில்லு அரைவேக்காடு
மார் 13, 2026 02:31 pm
Rate this
2024 இல் இருந்த ஸ்டேட்டஸ் அப்படியே MAINTAIN ஆகி கொண்டு இருக்கு
மார் 13, 2026 02:39 pm
Rate this
மார் 13, 2026 01:42 pm

பட்டப்பகலில் ஸ்வாதி என்கிற பெண் நுங்கம்பாக்கம் ரைல்வே ஸ்டேஷன் இல் கொல்லப்பட்டாரே அது என்ன கணக்கு, YOUTUBE INSTA TELEGRAM இவற்றில் எல்லாம் ரீலிஸ் தடை செய்யுங்கள் அதை தடை செய்யாதவரை இது தொடரும்

Reply Rate this
Anand - chennai
அந்த கொலை குற்றவாளியை காப்பாற்ற முக்கி முக்கி முட்டுக்கொடுத்தது திருட்டு திராவிஷத்தின் கூட்டாளி தானுங்க.
மார் 13, 2026 02:02 pm
Rate this