அ.தி.மு.க., டிஜிட்டல் பிரசாரம் துவக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில், மாவட்ட அ.தி.மு.க., சார்பில் விலைவாசி மற்றும் வரி உயர்வால் மக்கள் அவதிப்படுவதை விடியா ஆட்சிக்கு உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற டிஜிட்டல் பிரசாரம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மாணவரணி செயலாளர் சக்திவேல், மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., அரசின் விலைவாசி மற்றும் வரி உயர்வு தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தொழில்நுட்ப பிரிவு விழுப்புரம் மண்டல துணை செயலாளர் ஜெகதீஸ்வரி மற்றும் நிர்வாகிகள் காயத்ரி, அசோக்குமார், பத்மபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)