Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


60 தொகுதிகள் லட்சியம்; 40 நிச்சயம்: பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு

60 தொகுதிகள் லட்சியம்; 40 நிச்சயம்: பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் விபரம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில், சென்னையில் நேற்று இறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க.,விடம், 60 தொகுதிகளை கேட்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இரு மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், அக்கட்சி தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் தொடர்பாக இறுதிகட்ட ஆலோசனை நடந்தது.
அதன் அடிப்படையில், அ.தி.மு.க.,விடம், 60 தொகுதிகளை கேட்டு, வரும் வாரத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சை துவக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழக பா.ஜ., போட்டியிட விரும்பும் தொகுதிகள் விபரம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது.

அவரது ஆலோசனையின்படி, அந்த தொகுதிகள் சந்தோஷ் நடத்திய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டன.

அ.தி.மு.க.,விடம் 60 தொகுதிகளை கேட்டு பேச்சு நடத்தப்படும். எப்படியாவது 40 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் சந்தோஷ் உறுதியாக உள்ளார்.

மேலும், தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய களப்பணிகள், அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

பிப் 15, 2026 04:43 pm

234

Reply Rate this
பிப் 15, 2026 04:42 pm

எடப்பாடியை நம்பும் அமித்ஷா அசிங்கப்படாமல் தப்பித்தால் சரி திருட்டு திராவிட கூட்டத்தை நம்பவே முடியாது.

Reply Rate this
பிப் 15, 2026 04:15 pm

The dream of capturing more seats in Tamilnadu will become a real one if
Shri Annamalai leads as President of LOTUS, lest a big Zero.

Reply Rate this
பிப் 15, 2026 03:14 pm

அறுபது தொகுதிகள் கேட்போம்,நாற்பது தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருப்போம்.கடைசியில் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம் என்பது தான் பாஜகவின் கொள்கை! காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலை தான்!

Reply Rate this
பிப் 15, 2026 01:08 pm

எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணம் தான் முக்கியம். ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்கவே மாட்டோம். இப்படி எல்லாம் உளறிய மாநில தலைவரை வைத்துக் கொண்டு 40 சீட்டு என்ன 20 சீட்டு கிடைத்தாலும் இபிஎஸ் .. பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் நம் பிஜேபி யினர்.

Reply Rate this
பிப் 15, 2026 10:57 am

ஏதோ மூணுபடி லட்சியம் ஒருபடி நிச்சயம் வசனம் ஞாபகத்துக்கு வருதே...

Reply Rate this

பிஜேபி நூறு தொகுதிகளில் ஜெயிக்கும் வலிமை கொண்டது. தமிழகத்தில் ஒரே எதிர்க்கட்சியாக பிஜேபி மட்டுமே உள்ளது. ஜெயிலுக்கு போக பயந்து அதிமுக தலைவர்கள் கடந்த ஐந்து வருடத்தில் ஓடிஒளிந்துவிட்டனர். இப்போது வெளியே தலைகாட்டுகிறார்கள்.

Reply Rate this
பிப் 15, 2026 07:01 am

கனவு காணுங்கள் அதற்க இப்படி கனவு காணலாமா ..?.ஒரு சீட்டு வாங்க முடியாத பிஜேபி 60 சீட்டு ...முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா ..?.

Reply Rate this
சிட் பேரமெல்லாம் ஏற்கனவே முடிந்திருக்கும்
பிப் 15, 2026 07:37 am
Rate this
பிப் 15, 2026 06:37 am

நல்ல காமடி தலைவர் இருக்கும் வரை நடக்காது

Reply Rate this
மக்களின் மனதில் இடம் பெற வேண்டும் அதற்கான முயற்சி செய்யுங்கள்.
பிப் 15, 2026 11:18 am
Rate this