/ செய்திகள் /  என்னால்தான் ரூ.5,000 கிடைத்தது : த.வெ.க., தலைவர் விஜய்

 என்னால்தான் ரூ.5,000 கிடைத்தது : த.வெ.க., தலைவர் விஜய்

த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை: புதிதாக கோடைக்கால சிறப்புத் தொகையாக, 2,000 ரூபாயை திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான், கோடைக்காலம் வருகிறதா. வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, 13ம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இதற்கெல்லாம் காரணம், வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். தி.மு.க., தனக்கு போட்டியாக கருதுவதும் த.வெ.க.,வை தான் என்பதை, இந்த அறிவிப்பு வழியே முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். என் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த உரிமைத் தொகையை, சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !