/ செய்திகள் /  பா.ஜ., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி

 பா.ஜ., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் மேற்கு நகர பா.ஜ., சார்பில் மக்களிடம் தேர்தல் அறிக்கைக்காக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் முரளி, துணை தலைவர்கள் வடிவேல் பழனி, குபேரன் முன்னிலை வகித்தனர். பா.ஜ., தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை மக்களிடம் நேரடியாக பெற்று அதற்காக கட்சியின் தலைமை அனுப்பிய கருத்து கேட்பு பெட்டியில் மனுக்களை பெற்றனர். நகர செயலாளர் சுந்தரம், ஹிந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கலைமணி, அகில இந்திய விஸ்வகர்மா பேரவை மாநில அவைத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீஷ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !