அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார்.
நகர அவைத் தலைவர் யோகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அப்துல்ரஷீத், வர்த்தகர் அணி தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும், ஓட்டுச்சாவடிக்கு பூத் நிர்வாகிகள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்