காங்., நிர்வாகிகள் எதிர்ப்பால் பா.ம.க., கூட்டம் இடமாற்றம்
சென்னை: காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பால், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடக்கவிருந்த பா.ம.க., இளைஞரணி பொதுக்குழு கூட்டம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கவுள்ளது. அன்புமணி தரப்பு பா.ம.க., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க., இளைஞரணி பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அரங்கத்துக்கான கட்டணம் செலுத்தி, அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட நிலையில், திடீரென அரங்கப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே , நாளை காலை 10:00 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., திடலில் கூட்டம் நடக்கும்' என, கூறப்பட்டுள்ளது. காங் கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில், இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு, அரங்க மேலாளரிடம், பா.ம.க., தலைவர் அன்புமணி தரப்பில் அனுமதி பெறப்பட்டு இரு ந்தது. இத்தகவல் அறிந்த காங்., நிர்வாகிகள், 'பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணிக்கு, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தை கொடுப்பதா?' என எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இதை விரும்பவில்லை. அதை தொடர்ந்து, பா.ம.க., கூட்டத்திற்கான முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அன்புமணி தரப்பிடம், காமராஜர் அரங்க மேலாளர் தெரிவித்துள்ளார். இதனால், பா.ம.க., கூட்டம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலுக்கு மாற்றப் பட் டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தேர்தலில் வீடியோ பிரசாரம் ஒன்லி; விஜய் முடிவால் கட்சியினர் ஷாக்
பிப் 19, 2026 05:21 am
கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர் தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
பிப் 19, 2026 03:59 am