Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 கூடுதல் 'சீட்'டுக்காக கூட்டணி மாறும் அவசியம் இல்லை: திருமாவளவன்

 கூடுதல் 'சீட்'டுக்காக கூட்டணி மாறும் அவசியம் இல்லை: திருமாவளவன்

திருச்சி: ''காங்கிரஸ் கட்சி, தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறது; எங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது, ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கை. தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, அடுத்தடுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

அது குறித்த நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை தருகிறது. எனவே, மது ஒழிப்பு குறித்து, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படுவது இயல்புதான். கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர், ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்.

ஆட்சியில் பங்கு கேட்பதால், ஒரு கூட்டணி உடைந்து விடாது. கூட்டணியில் இருப்பதால், உரிமையோடு பங்கு கேட்கின்றனர். காலங்காலமாக வெற்றிக்காக உழைத்திருக்கிறோம் என்று கூறி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை.

'தமிழக அரசியலுக்கு அது பொருந்தி வராது' என முதல்வர் ஸ்டாலின் சொன்னால், பேச்சு நடத்தினால் அது முடிவாகும். காங்கிரஸ் நிச்சயம் தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கும்.

இந்த கூட்டணியை உருவாக்கிய எங்களுக்கு, அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

எனவே, வேறு அணியில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கூட்டணியில் நீடிப்பதோடு, எங்களுக்கான உரிமையை கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

பிப் 19, 2026 07:51 am

காங்கிரஸூக்கு விழுந்த அடி இவரை இப்படி பேச வைத்து உள்ளது.

Reply Rate this
பிப் 19, 2026 07:49 am

எங்களுக்கு மானம் பெரிதல்ல..பிளாஸ்டிக் சேரும் பத்து கோடி பணமும் போதும்.. எல்லாருக்கும் பின்னாடி கைகட்டி நிற்க நான் தயார்.. பூனை குட்டிகளின் தலைவன்..

Reply Rate this
பிப் 19, 2026 07:49 am

திமுக விற்கு தலைவலி ஆரம்பம்

Reply Rate this
பிப் 19, 2026 07:21 am

எங்க போனாலும் பிளாஸ்டிக் சேர் தான் கொடுப்பானுங்க. பேசாம இங்கேயே தரை டிக்கெட்டோட பொட்டியும் கெடச்சிடும்

Reply Rate this
பிப் 19, 2026 06:56 am

எப்படியும் யாரும் கூப்பிடறதில்லை. வேறே கூட்டணியில் சேத்துக்குவாங்களா. கூடுதால் சீட்டுன்னு ஒரு பிட்ட போட்டு பாத்து தளபதி ரெண்டு சீட்டுக்கு மேலே தேறாதுன்னு தெரிஞ்சி போச்சு அதனாலே குப்புற விஷுந்தாலும் மீசைல மண் ஓட்டலேங்கறமாதிரி இப்படி ஒரு ஸ்டண்ட்

Reply Rate this
பிப் 19, 2026 06:54 am

சீட்டு பெரிதா அல்லது பெட்டி பெரிதா என்றால் பெட்டிதான் பெரியது என்று ஒப்புக்கொண்டுவிட்டார்.

Reply Rate this
பிப் 19, 2026 06:32 am

Karunainidhis family, Thirumavalavan, Joseph Vijay and Vaiko belong to the Telugu Dravidian Christian Community. They will be always walking together and will be always in even keel. They will never get separated. They are in politics to loot huge money from the people of Tamil Nadu. They are Anti-nationals, Separatists, Anti-socials, Anti-Hindu and Anti-Hindi.

Tamil Nadu people should be very shrewd in understanding the above mentioned evil people, should not vote for them and they have to be kicked out of Tamil Nadu.

Reply Rate this