இது நடந்தால்... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: சொல்கிறார் திருமா!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. இந்த இரு கட்சிகள் (பாமக, பாஜ) இடம்பெறும் அணியில் இடம்பெற மாட்டோம்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: அவர்கள் மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பினார்கள். இவர்கள் ஜாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தலித் சமூகத்திற்கு எதிராக பரப்பினார்கள். சோசியல் இன்ஜினியரிங் என்ற யுத்தியை கையாண்ட காரணத்தினால், நாங்கள் வந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 48 )
பா.ஜா.பா. அணியிலுங்களுக்கு இடமே கொடுக்கமாட்டார்கள் இதுவேறு நப்பாசையா உங்களுக்கு கூப்பிட்டாலும் நீங்கள் சேரமாட்டோம் என்று சொல்ல வெட்கமாக இல்லை தலைதெறிச்சு ஆடவேண்டாம் கற்பனையில் மிதக்க வேண்டாம் தேர்தலுக்கு பிறகு கட்சியே காணாமல் போயிடும்
கூட்டணிக்குள்ள வேற ஏதோ கசமுச நடந்திருக்கணும். ஆதை மூடி மறைக்க இந்த உருட்டு. சிறுத்தையை வெளியே தள்ளிட்டா பூனைகுட்டியே ஏறி மிதிக்கும்.
பெட்டி பெட்டியாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வரவைத்தேடி காத்திருந்தவர்களா இப்படியா பேசுவது அந்த பெட்டிகளில் வந்தவைகள் எங்கு சென்றன இப்போது திடிரென்று இப்படி பேசினால் இனி பெட்டிவாராது திட்டி திட்டி தேய்ந்தே போயிடுவார்கள் வட்டியுடன் இனி பெட்டி வந்த இடத்திற்கு நியாயமாக தொண்டு செய்ய வேண்டும்.
துணை தலைமை மற்றும் அறுபதா என்று தெரிய வில்லை
ஜனாதிபதி தேர்தலில்.... தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக போட்டியிட்ட... திரவுபதி முர்மு அவர்களுக்கு எதிராக வாக்களித்த ஆட்கள் தானே நீங்கள்..... தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் யாரும் உன்னை நம்ப மாட்டார்கள்..... உன் சாயம் வெளுத்து விட்டது..... இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
வீ சி கா அரசியல் அநாதை யாகி விடும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி கட்சி ஆரம்பித்து விட்டு.... இன்று அந்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல்.... குண்டு வைத்து மக்களை கொல்லும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலையை கட்சி எட்டி இருக்கிறது.... அது தான் உங்கள் கட்சியில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.
நொண்டிண்டி குதிரைய்க்கு சரிக்கினது சாக்கு.
ஒரு ஜாதி தலிவனாக இருந்து அடுத்த ஜாதியையும் ஓட்டுப்பிச்சைக்காக இந்துமதத்தையும் திட்டி கொண்டு இருக்கிற நீங்க பேச தகுதியில்லை
நம் இந்திய நாட்டின் சமகால அரசியலை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்றே பின் நோக்கி பார்த்தோமானால் அன்றிருந்த கள நிலவரம் என்ன? இன்று மோடி வந்த பிறகு அந்த நிலைமை எவ்வாறு மாறியிருக்கிறது மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் அதனால் ஏற்பட்ட அப்பாவி பொது மக்களின் உயிர்பலிகளையும் இவர் மறந்துவிட்டுத் தான் பேசுகிறாரா. மதவாதமும், பயங்கரவாதமும் எந்த ரூபத்தில் முகம் காட்டினாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக எந்தவித சமரசம் செய்து கொள்ளாமல் அதை வேரறுக்க நாட்டுபற்றுடனும், உறுதியுடன் செயல்படும் பாஜக மதவாத கட்சியா? நிர்வாக ரீதியிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை திறம்பட நடத்தி கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள் பாடும் உளுத்துப் போன, உப்பு சப்பற்ற முகாரி ராகம் பாஜக மதவாத கட்சி
மேலும் செய்திகள்
அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்
பிப் 14, 2026 12:18 pm