கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: '' என்னுடைய கூட்டணி மொத்த இந்தியாவோடு. கூட்டணியை விட கொள்கையே முக்கியம்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் கமலின் கன்னிப்பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில், '“எங்கள் ஓட்டுகளை செலுத்த விரும்புகிறோம். எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம். நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால், தேர்தல் கமிஷன் மன்னிப்பதில்லை. இ.சி., என்றால் 'இங்கிலீஷ் கோச்' இல்லை,” ' எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த கமல் கூறியதாவது: ஜனநாயகத்தில் விவாதம் நடப்பது இயல்பு. நல்ல கருத்து பேசியிருப்பதாக உணர்கிறேன். மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும்.என்னுடைய கூட்டணி ஒட்டு மொத்த இந்தியாவோடு. இந்தியாவின் நலன் தான் எனது நலன். உங்களின் நலன். கூட்டணி என்பது 6 ஆண்டுக்கு ஒரு முறை அமைக்கப்படுவது. கூட்டணியை விட கொள்கையே முக்கியம். எங்களின் தேர்தல் வியூகத்தை உங்களிடம் கூற முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 127 )
நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒரு ராஜ்ய சபா சீட்க்காக திராவிட மாடல் அறிவாலயத்தில் தஞ்சம் அடைந்த நீயெல்லாம் கொள்கைய பற்றி பேச என்ன தகுதி இருக்கு. கைல ஒரு மைக் கிடைச்சுட்டா வாய்க்கு வந்தத உளறக்கூடாது உளறல் நாயகனே.
கூட்டணியை விட கொள்ளையே முக்கியம்.. பதவிக்காகக் கொள்கையை அடமானம் வைக்கலாம், கட்சியையே கூட அடமானம் வைக்கலாம்.. தன்மானம், சுய மரியாதையெல்லாம் கூட கொசுறாகக் கொடுக்கலாம்.
ராகுல் காந்திக்கு அடுத்து தன்னை ஒரு அதிமேதாவியாக நினைத்துக்கொள்ளும் பிறவிகளில் இவரும் ஒன்னு... கடைசிவரை அந்த டிவி யை எதுக்கு உடைச்சாருன்னு சொல்லவே இல்லை... இதுல கொள்கையாம்... மக்களையே சந்திக்காமல் கெடச்ச பதவி... இதில் பேச்சு வேற....
உங்கள் கொள்கை தான் என்ன...சார் ...???
கமலுக்கு என்ன கொள்கை இருக்கு ..ஒரு மணகட்டியும் இல்லா ...
அட அறிவுகெட்ட உப்பிகளா இத அந்தம்மா சொல்லல.. உங்க ஈவெரா சொன்னது.. அத அந்தம்மா பெரியார் ப்படி சொன்னார் இப்படி சொன்னவரை நீங்கள் தலைவராக கொண்டாடுகிறீர்களேன்னு கேட்டார்.. அதுக்கு அந்த உளறல் நாயகன் எதையோ உளர்றாரு .. 200 ரஸ் உப்பீஸ் வழக்கம்போல கூவுறீங்க.. கமல்: கூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம். நிருபர்: சூப்பர் சார் உங்க கொள்கை என்ன?? கமல்: கூட்டணிதான் கொள்கை.. நிருபர்: அய்யயோ எனக்கு டிக்கெட் போடுங்க நான் ஊருக்கு போரென்.. முடியல
கமல்: கூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம். நிருபர்: சூப்பர் சார் உங்க கொள்கை என்ன?? கமல்: கூட்டணிதான் கொள்கை.. நிருபர்: அய்யயோ எனக்கு டிக்கெட் போடுங்க நான் ஊருக்கு போரென்.. முடியல
தின மலர் தயவு செய்து இவரின் சேதிகளை மறைக்க வேண்டும். முடியல. புரியல.
ஆமாமாம். கூட்டணியை விட "கொள்ளையே" முக்யம். இதுதான் போலி மதசார்பின்மை கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிலைப்பாடு
பிச்சை எடுத்து உளறும் கொள்கையா? பத்திரிகையாளர்கள் இந்த மாதிரி கோமாளிகளைப் பேட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும்
மேலும் செய்திகள்
தமிழக பா.ஜ.,வில் அமைப்பு பொதுச்செயலர் நியமனம் இப்போதைக்கு இல்லை: ஆர்.எஸ்.எஸ்.,
பிப் 12, 2026 01:19 am
காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,
பிப் 12, 2026 12:27 am