Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 விவசாயிகளை தவிக்க விடும் தி.மு.க., அரசு

 விவசாயிகளை தவிக்க விடும் தி.மு.க., அரசு

விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி என, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இந்த முறை மக்காச்சோளம் அமோகமாக விளைந்துள்ளது. ஆனால், தி.மு.க., அரசின் அலட்சியத்தால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒரு புறம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குவின்டாலுக்கு 2,400 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையை மக்காச்சோளத்துக்கு அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க., அரசோ, வியாபாரிகளின் 'சிண்டிகேட்டில்' சிக்கி தவிக்க விட்டு, விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது. மக்காச்சோளத்தின் விலை வீழும்போது, கர்நாடகா போன்ற மாநிலங்கள், உரிய இழப்பீடு வழங்குகின்றன. ஆனால், தமிழகத்திலோ, விவசாயிகளின் கண்ணீரை வேடிக்கை பார்த்து வருகிறது.

--நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement