ராமதாசை நான் ஏற்றாலும் வி.சி.,க்கள் ஏற்க மாட்டார்கள்: திருமாவளவன்
சென்னை: 'பா.ம.க., ராமதாஸ் தரப்பை நான் ஏற்றாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏற்க மாட்டார்கள்' என, தி.மு.க., தலைமையிடம் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக வி.சி., பயணித்து வருகிறது; இதுவரை, ஒரு சட்டசபை மற்றும் இரண்டு லோக்சபா தேர்தலை சந்தித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில் வி.சி., நீடிக்கும்.
இதற்கிடையே, பா.ம.க.,வின் ராமதாஸ் தரப்பினர், தி.மு.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர். அதே நேரம், 'பா.ம.க.,வின் எந்த தரப்பு வந்தாலும், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்' என, எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து விட்டார்.
ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க, திருமாவளவனிடம் தி.மு.க., தலைமை சமரச பேச்சு நடத்தியுள்ளது. ஆனால், திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டார்.
குறிப்பாக, 'ராமதாசுடன் இணைந்து பணியாற்ற நானே விரும்பினாலும், வி.சி.,யினர் ஏற்க மாட்டார்கள். அப்படி செய்தால், பட்டியலினத்தவர்களின் ஓட்டுகள் அதிகளவில் த.வெ.க., பக்கம் சென்றுவிடும். அதற்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகிவிடும்' என கூறி விட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

அப்ப இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லையா? ஆனாலும் கோபாலபுரத்தின் ஒரு சீனியர் கொத்தடிமை தன் உரிமையை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார்.