Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்

ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருநெல்வேலி: தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கும் நோக்கில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வீதம் திமுக அனுப்பி உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:கல்வியில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது கஞ்சா நிறைந்த மாநிலமாக மாறி உள்ளது. ஆளும் திமுக அரசு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. திறமை இல்லாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கழித்தே வழங்கத் தொடங்கினர். பொங்கலுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.3,000 வழங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அந்த உதவி வழங்கப்படவில்லை. தேர்தல் வருவதால்தான் இந்த ஆண்டு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20 கோடி

இதேபோல், தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கும் நோக்கில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தி.மு.க நம்புகிறது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் வழக்கில் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் தி.மு.க.வினர் போட்டி போட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் தி.மு.க ஆட்சிக் காலத்தில் இதுவரை 33 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன.

டப்பா இன்ஜின்

அதையெல்லாம் மறைக்க தி.மு.க.வினர் 'டப்பா இன்ஜின்' என போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.மத்திய பட்ஜெட் மிகச் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடிக்கு செமி கண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.

விசில் அடிக்க...

கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர். இங்கிருந்து கனிம வளங்களை எடுத்துச் சென்று, அங்கிருந்து கழிவுகளை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். விஜய்க்கு விதிக்கப்பட்ட வரி அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என கூறி வந்தார். இப்போது விஜய்க்கு எதிராக விசில் அடிக்கத் தொடங்கியுள்ளோம். இனி ஒன்றிணைந்து அவருக்கு எதிராக டிரம் அடிப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement

பிப் 10, 2026 08:46 pm

"யோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை"
வேறு யாரவது சொன்னாலாவது பரவாயில்லை. சொல்பவர் யோக்ய சிகாமணி....

Reply Rate this

ஒருத்தனும் கனிம வளம் போரத பத்தி பேசல . இங்க குப்பை கொட்டும் கேரளா பத்தி பேசல. காசு காசு இப்போதே எந்த கட்சி எவ்வளவு கொடுக்கும் கணக்கு போட ஆரம்பிசி ட்டானுங்க . இந்த எலக்ழனும் விளங்கிடும் .

Reply Rate this
பிப் 07, 2026 01:29 pm

யோக்கிய சிகாமணி போல பேச வேண்டாம் இங்கு அனைவரும் கள்வர்களே

Reply Rate this
பிப் 07, 2026 06:21 am

திமுக வினர் அப்படிதான் பேசுவார்கள்.

Reply Rate this
பிப் 07, 2026 05:31 am

ஒரு நாலு கோடி கூட கையாள் முடியாது. அவிங்க நாலு.லட்சம் கோடி கேஷாவே டீல் பண்றவங்க.

Reply Rate this
பிப் 06, 2026 09:44 pm

1). இதற்கு முன்னால் பணம் பட்டுவாடா செயகிறபோது இதுவரை நடந்த தேர்தலில் election commission எலக்சன் கமஷனரிடம் நீங்கள் அல்லது பிஜேபி சார்பாக ஏன் புகார் அளிக்கவில்லை.
2). குறைந்த பட்சம் ஏன் நீதி மன்றம் செல்லவில்லை.
3). அப்படி பார்த்தால் நீங்களும் ஒருவிதத்தில் குற்றவாளி தான் என்பதை அறிய முடிகிறது.
4). அஇஅதிமுக வரும் தேர்தலில் பணம் கொடுக்காது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியமா?
5). இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே பாலிசி மற்றும் கொள்கை உடன் வேலை செய்யும் போது நீங்கள் பழைய 2024 தேர்தல் NDA கூட்டணி உடன் வரும் தேர்தலை எதிர் கொள்ளவில்லை.

Reply Rate this
பிப் 06, 2026 09:12 pm

நாலு கோடி எல்லாம் பத்தாது. 20 கோடி அனுப்புங்க,

Reply Rate this
பிப் 06, 2026 07:39 pm

நாலு கோடி நாயனார்

Reply Rate this
பிப் 06, 2026 07:14 pm

தொகுதிக்கு 20 கோடி போய் இருக்கிறது. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை தூங்கிக் கொண்டு இருக்கிறது என்று நயினார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்

Reply Rate this
பிப் 06, 2026 07:14 pm

அவங்க எப்படி ஒரு பிசிறு இல்லாம பணம் அனுப்பிவச்சுருக்காங்க ... உங்களால ஒரு நாலு கொடிய ஒழுங்கா அனுப்ப முடியல.. ஒழுங்கா ஒரு வேலைய செய்ய துப்பில்லை..

Reply Rate this