பேராசிரியர்கள் பெரம்பலுாரில் முகாம்
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். கடந்த 2014 தேர்தலில் கட்சினரை மட்டும் நம்பி, வேட்பாளர் கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் சுருட்டிக்கொண்டதால், பாரிவேந்தர் அந்த தேர்தலில் தோல்வியுற்றார். இரண்டாவது முறை போட்டியிட்டபோது, தி.மு.க.,வினர் கனகச்சிதமாக இந்த வேலையை பார்த்துக் கொண்டனர்.
இந்த தேர்தலில், கட்சியினரை நம்ப அவர் தயாராக இல்லை. அதனால், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்களை பயன்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி, 1,800 பேர் தேர்தல் பணிக்காக சென்னையில் இருந்து பெரம்பலுாருக்கு வந்துள்ளனர்.
வாசகர் கருத்து