கணவருக்கு துாத்துக்குடி... மனைவிக்கு விருதுநகர்?
பா.ஜ., கூட்டணியில் இறுதி செய்யப்பட்டுள்ள இரண்டாவது கட்சியான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி துாத்துக்குடி, விருதுநகரை குறிவைக்கிறது. விருதுநகரில் ராதிகா, துாத்துக்குடியில் தான், இரு தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டி என்பது தான் சரத்குமாரின் இப்போதைய விருப்பம்.
ஏற்கனவே விருதுநகரில் பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், சரத்குமார் மனைவிக்காக அழுத்தம் கொடுப்பது பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை.
ராதிகா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்; சரத்குமார் நாடார் இனத்தவர். அவ்விரு இனத்தவரும் அதிகம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டால், ராதிகா நிச்சயம் வெற்றி பெறுவார் என்றே சரத் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
பா.ஜ., தரப்பில் ச.ம.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கினால், கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு கிட்டும். அதனால், எப்படியும் தனக்கு இரு தொகுதிகள் வேண்டும் என்றும் சரத்குமார், பா.ஜ., தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து