/ செய்திகள் /  த.வெ.க., தனித்து போட்டியிடும்: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்

 த.வெ.க., தனித்து போட்டியிடும்: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்

சென்னை: ''சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்துதான் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறினார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய, தமிழக அரசை கண்டித்தும், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், கரூர் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவர். எம்.ஜி.ஆருக்கு பின், அரசியலுக்கு வரவிருந்த நடிகர் ரஜினி, தி.மு.க., மிரட்டலுக்கு பயந்து, 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தனித்துப் போட்டியிட்டு வந்த ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறிய கமலும், மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும், தி.மு.க., பக்கம் போய் விட்டனர். மக்கள் ஆட்சியை நோக்கி, இந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து தான் போட்டியிடும். அதற்காக, 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் தயார் செய்து விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

'பாட்டிகளுக்கும் பாதிப்பு'

பீஹார், கர்நாடகா, ஒடிஷா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். அதைப் பற்றி சிந்திக்காமல், விளம்பரம் செய்து, மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது, தி.மு.க., அரசு. தமிழகத்தில், தினசரி கொலை, கொள்ளை நடக்கிறது. 2 வயது குழந்தை முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருள் கிடைக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்தும் இந்த ஆட்சியாளர்களை, இனி மக்கள் நம்பப் போவதில்லை. - ஆனந்த், பொதுச்செயலர், த.வெ.க.,

பெண்கள் கூட்டம் குறைவு!

த.வெ.க., சார்பில் நேற்று, அனைத்து மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கமாக, த.வெ.க., சார்பில் எந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், சரிபாதி பெண்கள் கூட்டம் இருக்கும். ஆனால், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், எல்லா மாவட்டங்களிலும் பெண்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதற்கான காரணம் குறித்து, த.வெ.க., தலைமை வட்டாரம் விசாரிக்கிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Easwar Kamal
மார் 13, 2026 18:16

இவன் விடியல் கட்சியின் கை கூலி இவன் எப்படி விஜய் ஜெயிக்க வச்சுருவானா ? முடிஞ்சமட்டும் விஜயை இந்த தேர்தலில் ஒளித்து கட்டிவிட்டு தான் நடையை கட்டுவான். இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா ? குடும்பத்தோடு இருந்தால் சகுனி யாரு நல்லவன் யாரு கண்ணுக்கு தெரியும். தனித்து ஒளிந்து இருந்தால் உண்மை எப்படி தெறியும்


john
மார் 13, 2026 14:45

அரசியலில் சின்ன விஷயம் கூட பெரிதாக பேசப்பட்டு கட்சியின் தோல்விக்கான பாதையாக அமைந்து விடும்


Ms Mahadevan Mahadevan
மார் 13, 2026 13:24

தணிந்து போட்டி இட்டு உங்கள் பலம் தெரிந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலில் பிற கட்சிக கூட்டணிக்கு வரிசை கட்டி வைப்பார்கள். அப்புறம் நீங்க தான் கோட்டையில் குறட்டை விட்டு சுகமாக தூங்கலாம்


அருண் பிரகாஷ் மதுரை
மார் 13, 2026 13:05

சொன்ன சொல் தவற மாட்டான் இந்த சாமி..தலைகீழாகத் தான் குதிப்பேன்.. குதி கண்டிப்பாக தனியாக குதி..


Madras Madra
மார் 13, 2026 11:19

அதிமுக பா ஜா க நேற்று த வெ க வுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என்று சொல்லும் வரை இவர் தூங்கி கொண்டு இருந்தார் இப்ப திடீரென்று நாங்க தனியா என்று சொல்கிறார்


Keshavan.J
மார் 13, 2026 10:50

மகாபாரத சகுனியை பார்ப்பது போல் உள்ளது இவரை பார்த்தால். விஜயோட ஒரு 500 கோடியாவது கை விட்டு போகும்.


Haja Kuthubdeen
மார் 13, 2026 10:31

ஆதவ்....நீ நல்லவனா கெட்டவனா!!!!??????ரொம்ப ரொம்ப சந்தேகமாவே இருக்கு?


SULLAN
மார் 13, 2026 16:37

அதிலென்ன சந்தேகம் கெட்டவன் ?? மகா கெட்டவன்.


ramesh
மார் 13, 2026 17:39

ஸ்லீப்பர் செல் போல தெரிகிறது


Abdul Gafoor
மார் 13, 2026 10:26

Thaniya irunthu vote ah piringa..DMK win confirm


bharathi
மார் 13, 2026 10:00

Super hence other than vijay no one can win and he will join in zoom for assembly session


C G MAGESH
மார் 13, 2026 09:44

இவன் சபரீசனின் ஸ்லீப்பர் செல் தான்