Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


கொள்கை இல்லாதவர் த.வெ.க., தலைவர் விஜய்; சரத்குமார் விமர்சனம்

கொள்கை இல்லாதவர் த.வெ.க., தலைவர் விஜய்; சரத்குமார் விமர்சனம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கொள்கை இல்லாதவர் தவெக தலைவர் விஜய் என நடிகரும், பாஜ தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து சரத்குமார் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு த.வெ.க., வருவது போன்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், கூட்டணிக்கு வந்தால் நல்லது. வராவிட்டால் என்னாகும் என சொல்ல முடியாது. இலவசம் வேண்டாம் என்று, துவக்கத்தில் நிறைய பேசிய விஜய், பின், முரண்பாடாக அறிவிப்புகள் வெளியிடுவது சரியல்ல. இலவசம் இல்லாத கொள்கைகளை வெளியிட்டிருந்தால், வரவேற்புக்குரியதாகி இருக்கும்.

கட்சி துவக்கும் போது, அனைவரும் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பேன் என்று தான் சொல்வர். ஆளுங்கட்சிக்கு மாற்று நாங்கள் தான் என்றும் சொல்வர். ஆனால், உண்மை நிலை வேறு. நடப்பதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, விஜய் கொள்கை இல்லாத மனிதராக தெரிகிறார். கடந்த 1996ல், எனக்கும் பெரிய கூட்டம் கூடியது. அதற்காக, கூட்டத்தை வைத்து வெற்றியை தீர்மானிக்க முடியாது. நடிகர் விஜய், 15 சதவீத ஓட்டு வாங்கினால்கூட வெற்றியடைய மாட்டார். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Advertisement

மார் 12, 2026 05:59 am

உங்களுக்கு மட்டும் கொள்கை இருந்திருந்தால் ஒரே கட்சியில் இருந்திருப்பீர்களே... நைட் இரண்டு மணிக்கு திடீரென உங்களுக்கு ஞானோதயம் வந்து உங்கள் கட்சியை இன்னொரு கட்சிக்கு அடமானம் வைத்திருக்க மாட்டீர்கள்...

Reply Rate this
மார் 11, 2026 11:38 pm

கொள்கை இல்லாத ஒரு கட்சியை தொடங்கி அதை அடமானம் வைத்து இன்று பா ஜ வுக்கு சொம்படிக்கும் இவன் கொள்கையை பற்றி பேச அருகதை இல்லாத அடமான அறிவாளி.

Reply Rate this
yes yes yes correct
மார் 12, 2026 07:06 am
Rate this
மார் 11, 2026 10:55 pm

விவாகரத்து விஷயம் கூட , சொத்து போய் விடும் என்கிற பயத்தில் , நாடகம்

Reply Rate this