த.வெ.க., தனித்து போட்டியிடும்: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்
சென்னை: ''சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்துதான் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய, தமிழக அரசை கண்டித்தும், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், கரூர் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவர். எம்.ஜி.ஆருக்கு பின், அரசியலுக்கு வரவிருந்த நடிகர் ரஜினி, தி.மு.க., மிரட்டலுக்கு பயந்து, 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனித்துப் போட்டியிட்டு வந்த ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறிய கமலும், மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும், தி.மு.க., பக்கம் போய் விட்டனர்.
மக்கள் ஆட்சியை நோக்கி, இந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து தான் போட்டியிடும். அதற்காக, 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் தயார் செய்து விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
மகாபாரத சகுனியை பார்ப்பது போல் உள்ளது இவரை பார்த்தால். விஜயோட ஒரு 500 கோடியாவது கை விட்டு போகும்.
ஆதவ்....நீ நல்லவனா கெட்டவனா!!!!??????ரொம்ப ரொம்ப சந்தேகமாவே இருக்கு?
Super hence other than vijay no one can win and he will join in zoom for assembly session
தவெக தலைவர் பெயர்: ஜோசப் விஜய். தவெக அரசியல் வியூக வகுப்பாளர் பெயர்: ஜான் ஆரோக்கியசாமி. தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பெயர்: ஆதவ் அர்ஜூன் ரெட்டி. அர்ஜூன் மாமனார் பெயர்: லாட்டரி மார்ட்டின். அர்ஜூன் மாமியார் பெயர்: லீமா ரோஸ். அர்ஜூன் மனைவி பெயர்: டெய்சி. இருவருக்கும் திருமணம் நடந்தது church ல் இனம் இனத்தோடுதான் சேரும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
தனியாவா அதோட சரி. நல்ல பெரிய அளவில் குழியை தோண்டி புதைச்சுடு அர்சுன் அதுக்கு தானே அங்கே போனே.
பலி ஆகறதுன்னு முடிவு பண்ணியாச்சு அணிலை வச்சு செய்யறானுங்க அவனை அழிக்க எதிரிகள் தேவை இல்லை

அதிமுக பா ஜா க நேற்று த வெ க வுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என்று சொல்லும் வரை இவர் தூங்கி கொண்டு இருந்தார் இப்ப திடீரென்று நாங்க தனியா என்று சொல்கிறார்