தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக, ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேசி வருகின்றனர். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் விரைவில் அழைத்து, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துவர். தற்போது, கூட்டணி கட்சிகளுக்குள் பேச்சு சுமுகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு, தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், மாற்று கூட்டணி எதுவும் தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை. இந்த தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., இரண்டாம் இடம் பிடிக்குமா என்பது, தேர்தலுக்கு பிறகே தெரியும். விஜயால், தமிழக அரசியல் தலைகீழாக மாறப்போகிறது என்பது போன்ற தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உன்னை போல வெத்துவேட்டுக்கள் சொல்லும் உளறல்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
சீட் கிடைக்கும் வரை உளறல் நீடிக்கும்.
இந்த நபர் தினம் வெளியிடும் உளறல் கலந்த அபத்த அறிக்கைகளை படித்தால் கட்டுக்கோப்பு பற்றி சந்தேகம் தான் வருகிறது.
மதில் மேல் பூனை தான் திரு மா.