Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 த.வெ.க.,வில் நாளை வேட்பாளர் நேர்காணல்

 த.வெ.க.,வில் நாளை வேட்பாளர் நேர்காணல்

சென்னை: சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில், தகுதியானவர்களை நேரில் அழைத்து நேர்காணல் நடத்த, த.வெ.க., தலைமை முடிவெடுத்துள்ளது. இதில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

த.வெ.க., நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சி சார்பில், எவ்வளவு பேர் விருப்ப மனு வழங்கினர் என்ற விபரத்தை, தலைமை இன்னும் வெளியிடவில்லை.

'ஆனால், பல தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வேலையை துவக்கி விட்டனர். இந்நிலையில், நாளை முதல் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடக்க உள்ளதாக, வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement