/ கிசுகிசு / பேசுங்க... பேசுங்க

பேசுங்க... பேசுங்க

தங்கள் கட்சிக்கு கொடுப்பதாக சொன்ன ராஜ்யசபா சீட்டை, தராமல் ஏமாற்றி விட்டதாக இலை கட்சித் தலைவர் மீது போகும் இடங்களில் எல்லாம் புகார் பட்டியல் வாசித்துக் கொண்டிருக்கிறார் முரசு கட்சித் தலைவர். 'இதை தேர்தல் பிரச்னையாக எடுத்து வைத்து பிரச்சாரத்தில் பேசுங்கள். அது நன்றாக 'பிக் - அப்' ஆகும் என்று பாயின்ட் எடுத்து கொடுத்து உற்சாகப்படுத்துவது சூரிய கட்சியை சேர்ந்தோர் தானாம். எச்சரிக்கை அவசியம் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வார காலமே உள்ளது. இந்நிலையில், 'கட்சி வேட்பாளர்கள் மீது எந்தவிதமான புகார்களும் வரக்கூடாது. ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, மாவட்டச் செயலர்களுக்கு சூரிய கட்சித் தலைமை தகவல் அனுப்பி இருக்கிறதாம். இதையடுத்து, அந்த தகவலை உடனடியாக தன் எல்லைக்குள் இருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கடத்தி, எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளனராம் மா.செ.,க்கள். எனக்கே பிடிக்கல சமீபத்தில், பவன் அலுவலகத்துக்கு வந்தாராம் கை கட்சியின் தலைவர். அப்போது, அவரை சந்தித்த சிலர், விசில் கட்சியோடு கூட்டணி சேராதது குறித்து கவலையோடு கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்தையும் கேட்ட தலைவர், அப்செட்டாக சில விஷயங்களைக் கூறினாராம். 'கட்சிக்குள் நடக்கும் பல விஷயங்கள் எனக்கே பிடிக்கவில்லைதான். ஆனாலும், வேறு வழியின்றி தலைவர் பதவியில் தொடருகிறேன்' என்று சொல்ல, தலைவரை ஏற இறங்க பார்த்தனராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !