/ செய்திகள் /  தி.மு.க., ஆட்சிக் காலம் கொடுமையானது: அண்ணாமலை பேச்சு

 தி.மு.க., ஆட்சிக் காலம் கொடுமையானது: அண்ணாமலை பேச்சு

கோவை: 'தி .மு .க., ஆட்சி காலம் கொடுமையானது,' என, கோவையில் அண்ணாமலை பேசினார். கோவை, காளப்பட்டி நேரு நகரில் பா.ஜ., சக்தி கேந்திரா தெருமுனை தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், சிங்கை தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராமன் பங்கேற்றனர். கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ் குமார் வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அந்தந்த கட்சியினர் அவர்களது கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவர். பொதுமக்கள் தான், நடுநிலையோடு முடிவு செய்து ஓட்டளிப்பர். அவர்களுக்கு எடுத்துச் சொல்லவே தெருமுனை பிரசாரம். தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி. 2006 ம் ஆண்டிலிருந்து 2011 வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்தனர். அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், அதைவிட கொடுமையாக உள்ளது. கோவை பகுதியில் மின் கட்டண உயர்வால் 325 மில்கள் மூடப்பட்டு விட்டன. மின் கட்டணத்தை குறைத்து வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் 34 கி.மீ., தூரம் கொண்டது. மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட திட்ட வரைவு தவறுகள் உள்ளன. மாற்றி அனுப்புமாறு கோரியது. 20 லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகையை மாற்றி தர வேண்டும். கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரியது. ஆனால், மாற்றித் தரவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் வரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது 4.64 லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. தி.மு.க., ஆட்சியில் 6 லட்சம் கோடி கடன் கூடியுள்ளது. தற்போது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் உள்ளது. இந்த கடன் மக்கள் மீதான கடனாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Santhakumar Srinivasalu
பிப் 26, 2026 20:04

இவரும் வரனும்! நிக்கிற தொகுதியை பார்த்து கவனீங்க?


Marai Nayagan
பிப் 26, 2026 16:25

திமுக- அதிமுக வேறுபாடு...திமுக குடும்ப கொள்ளை கட்சி பிரிவினைவாததை ஊக்குவிக்கும் அதிமுக எம்ஜிஆர் ஜெ காலத்தில் இருந்தே தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிபார்கள்...அவ்வளவே


Marai Nayagan
பிப் 26, 2026 16:21

திமுக டாஸ்மாக் மாடல் ஆட்சியில் மிசநரி மத வியாபாரிகள், கோழை தீவிரவாதிகள் , போதை வியாபாரிகள் மற்றும் பிரிவினை வாதிகள் கொட்டம் அதிகம்.


Marai Nayagan
பிப் 26, 2026 16:16

திமுகவின் டாஸ்மாக் மாடல் ஆட்சியில் கோவை முஸ்லிம் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு, கட்சிக்காரன் சாதிக் பாட்சா கஞ்சா கடத்தல், கிறித்தவ ஞான சேகர் செய்த கற்பழிப்பு என சிறு பான்மை ஓட்டுக்கு காசுக்கு செம்பு துக்கும் திமுக ஒழிக்க பட வேண்டும்


Dhanavel
பிப் 26, 2026 16:14

திமுக ஆட்சி நல்ல ஆட்சி... சங்கி அடிமைகள் தற்குறி அலறல் சாட்சி


Ramesh Sargam
பிப் 26, 2026 12:55

இந்திய வரலாற்றில் மிகவும் கொடுமையான ஆட்சியை கொடுத்திருப்பது திமுகவினர் மட்டும்தான். வரும் தேர்தலில் திமுக மெஜாரிட்டி இழந்து, படுதோல்வி அடைந்து கட்சியே முற்றிலும் ஒழியவேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவேண்டும்.


அசோகன்
பிப் 26, 2026 11:37

இப்போல்லாம் திமுக நிர்வாகிகள் அவர்களின் அல்லக்கைகள் பொது மக்கள் மேல் காரை விட்டு ஏத்தி கொல்கிறார்கள்... இருந்தாலும் நம் ஓட்டை அங்கேதான் போடணும்


Raj Kamal
பிப் 26, 2026 11:15

என்ன செய்ய... நாங்கள் பொறுத்துக்கொள்ளவில்லையா? அதே போன்று நீங்களும் பொறுத்துக்கொள்ளுங்கள். தவிர, வேறு வழியும் இல்லை.


ஜெகதீசன்
பிப் 26, 2026 10:36

சிறுபான்மையினர் தாஜா, இந்து மத வெறுப்பு மற்றும் அரசியலை ஒரு குடும்ப வியாபாரமாக இருப்பது ஆகியவை தான் திமுகவின் பாதகம். மற்றபடி, ஊழல் உட்பட அணைத்திலும் திமுக, அதிமுக பங்காளிகள் ஒரே மாதிரி தான். இதை அண்ணாமலை அவர்களே முன்பு சொன்னார்களே. மற்றபடி, தமிழக முன்னேற்றத்துக்கு காரணம் அதன் மக்களும் மத்திய அரசின் சமூக பொருளாதார நடவடிக்கைகளே.


பாலாஜி
பிப் 26, 2026 09:07

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தைவிட அதிக கொடுமையான ஆட்சி பாஜக கடந்த பத்து ஆண்டுகளாக செய்கிறது


vivek
பிப் 26, 2026 10:23

சொம்பு தூக்க சொன்னால் அண்டாவை தூக்குகிறார்..


xyzabc
பிப் 26, 2026 12:30

மாடல் ஆட்சியின் கொடுமை வேற லெவல். சனாதனத்தை இழிவு படுத்துவது, டாஸ்மாக்கை வளர்ப்பது, கஜானாவை காலி செய்வது இப்படி ஒரு பெரிய லிஸ்ட். ஆனால் மக்கள் மதி இழந்து உள்ளனர்.