Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தேமுதிக IN... காங் OUT? மீசை முறுக்கும் திமுக | DMK DMDK Alliance | DMK vs Cong | TN Election 2026


முன்பு எப்போதும் இல்லாத அளவு இந்த முறை தமிழக சட்டசபை தேர்தல் களம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட திமுக தலைமையிலான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி இதுவரை சிந்தாமல் சிதறாமல் அதே பலத்துடன் இருக்கிறது. அதிமுகவும் பாஜ, பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகளை வைத்துக்கொண்டு பலமாக வலம் வருகிறது. கடந்த தேர்தல்களில் கணிசமான ஓட்டு வாங்கி தங்கள் பலத்தை நிரூபித்த சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து நிற்கிறது. இந்த முறை நான்காவது அணியாக இளைஞர் படையுடன் விஜய் தலைமையிலான தவெகவும் களம் இறங்கி உள்ளது. நான்கு முனை போட்டி நிலவுவதால் இந்த முறை தேர்தல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட கூட்டணிகள் எல்லாம் இறுதியாகி விட்ட நிலையில், மூன்று சஸ்பெண்ஸ் மட்டுமே தேர்தல் களத்தில் நீடித்து வந்தது. ஒன்று தேமுதிக எங்கே போகும் என்பது; இன்னொன்று ராமதாசின் பாமக யார் கூட்டணியில் சேரும் என்பது; அடுத்தது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது. இந்த மூன்றில் தேமுதிக கூட்டணி சஸ்பெண்ஸ் இப்போது உடைந்து விட்டது.

Advertisement