Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


அசம்பாவிதம் இல்லாமல் கூட்டம் நடத்த தவெக முழு முயற்சி! Vijay | TVK | Karur Stampade


வேலூரில் வரும் 23ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வந்தனர். ஆனால், மக்கள் சந்திப்புக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட, அந்த நிகழ்ச்சி நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, வேலுார் மாவட்ட த.வெ.க.வினர் செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட த.வெ.க.வினர் கூறியதாவது: வேலுாரில் நடக்கும் கூட்டம், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக்கான நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்களை சந்திக்க வைக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், போலீஸ் மறுத்துவிட்டது. 4,900 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அதனால், மக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டு விட்டது.

Advertisement