தேர்தல் விழிப்புணர்வு
சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்போடுவதை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாணவியர்.
சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்போடுவதை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் பதாகைகளுடன் கலந்துக்கொண்ட மாணவியர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சட்டசபை தேர்தலில் நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில் நடந்த ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
100 சதவீதம் ஓட்டுப்பதிவாகும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இரு சக்கர வாகன பேரணி நடந்தது இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை.
சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில், நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இடம்: அமைந்தகரை.
சட்டமன்ற தேர்தலில் 100% ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மற்றும் தாசில்தாருமான கவிதா, நகராட்சி கமிஷனர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வலியுறுத்தி, புலி வேடம் அணிந்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு, திருமங்கலம், சென்னை.
தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத்தை பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்