சுதீஷின் 20 ஆண்டு கனவு தி.மு.க., கூட்டணியால் நனவானது
நமது நிருபர்
தே.மு.தி.க., பொருளாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ், அக்கட்சி சார்பில் குடியாத்தம் சட்டசபை தொகுதியில், 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன்பின், கள்ளக்குறிச்சி, சேலம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டும் தோல்வியை தழுவினார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த போது, ராஜ்யசபா எம்.பி., பதவியை சுதீஷுக்கு தர வேண்டும் என்று பேச்சு நடத்தப்பட்டது.
இது தொடர்பாக, ஒப்பந்தம் கையெழுத்தானதாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். அதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நிராகரித்தார். இதனால், சுதீஷின் எம்.பி., கனவு 20 ஆண்டு காலமாக நிறைவேறாமல் இருந்தது.
தற்போது, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா பதவி ஒதுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் சுதீஷ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., கூட்டணி வாயிலாக, அவரது 20 ஆண்டுகால எம்.பி., கனவு நனவாகி உள்ளது.
Advertisement
தெலுங்கு லாபிக்காக எத்தனை கட்சி தமிழகத்தில் தொழிலில் கோடி கட்டி பறப்பது இவர்களே தாங்கள் மட்டும் நல்லவர்கள் என்று காட்டி கொள்வர்
இருபது வருஷமா ஒரு எலெக்க்ஷன்லயும் ஜெயிக்க துப்பு இல்ல. வந்த வாழ்வை பாரு.
விஜய்க்கு தான் பெரிய நன்றி சொல்லணும். அவரு கட்சி விடியலுக்கு டப் கொடுக்கலனா இந்த குடும்ப கம்பெனி கட்சியை சீண்டியிருக்காது.
தேமுதிக கட்சி அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்திருந்தால் இங்கே கதறி இருக்கும் பரிவாரம் கம்முன்னு இருந்திருக்கும்.
சுதீஷுக்கு எம்பி ஆகணும்னு தான் கனவு தவிர மத்தபடி அதன்மூலம் மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னு அப்டிங்கிற பெரிய ஆசை எல்லாம் இருக்காது. தமிழ்நாட்டு அரசியல் சிரிப்பை சிரிக்குது.
இந்த கருமம் பிடிச்சவிங்க தொல்லை தாங்கமுடியாமல் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
இந்த விஷயத்துல ஒரு முக்கியமான கட்சியை விட்டுட்டோம். அதாங்க, பா.மா.க. அவங்க தான், சுயநலத்தின் உச்சக்கட்டம். முச்சந்தி, சவுக்கு அப்படின்னு என்ன என்னமோ சொன்னாங்க. அப்புறம் வேற மாதிரி ஆகிடுச்சு. அவங்க குடும்ப பெண் உறுப்பினர் சொத்து பட்டியலை வெளியிட்டருக்காங்க பாருங்க. அவங்களே அப்டினா, மத்தவங்க பத்தி செல்லவே வேண்டாம். பொதுமக்களின் வரிப்பணம், உழைப்பு, வியர்வை எல்லாம், அரசியல்வாதிங்க/அனுதாபிங்க /அடிவருடிங்ககிட்ட தான் பதுங்கி இருக்கு. தலைமை முதல் தொண்டனு சொல்லிக்கிற பதவி உறுப்பினர் வரை, அடேங்கப்பா, நெனச்சாலே தலை சுத்தி சுத்தி வருது.
கட்சியை திமுகவிடம் அடகு வைத்து கிடைத்த ராஜ்யசபா சீட் ஒன்றும் பெருமைக்குரியது அல்ல. மக்கள் நீதிமயம் வழியில் தேமுதிக பயணிக்கிறது. கட்சிகளின் எண்ணிக்கை குறைந்தால் சரி.
என்ன பொழப்போ அதான் சீக்கிரம் போய் சேர்ந்து விட்டார் கேப்டன் இந்த கும்பலிடம் இருந்து

ஓகோ இதுதான் டீலா, தொண்டன் என இருப்பவன் இப்படிபடட கட்ஷியில் இருப்பது வேஸ்டு