காங்., பா.ஜ. வேட்பாளர் பட்டியல் வெளியானது! அண்ணாமலை ஆதரவாளர்கள் ‛மிஸ்சிங்'
சென்னை: நீண்ட இழுபறிக்கு பின், காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. காங்கிரசில், 12 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. பா.ஜ. பட்டியலில்,அண்ணாமலைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.வுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புதிய நீதி, இந்திய ஜனநாயகம், புரட்சி பாரதம் கட்சிகள், வேட்பாளர்களை கடந்த வாரமே அறிவித்து விட்டன.
வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ. திணறியது. தமிழக பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், சென்னை வந்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, ஒரு தொகுதிக்கு 3 பேர் வீதம் பட்டியல் தயார் செய்து டில்லிக்கு அனுப்பினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. பொதுச்செயலர் சந்தோஷ் பங்கேற்ற கூட்டத்தில், நேற்று முன்தினம் வேட்பாளர்கள் தேர்வு நடந்தது. கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
பா.ஜ. தேசிய பொதுச்செயலர் அருண்சிங் நேற்று மதியம் பட்டியலை வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகள் கிருத்திகாவுக்கு சீட் தந்துள்ளனர்.
அண்ணாமலைக்கும் அவர் பரிந்துரைத்த ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு தரவில்லை. அமர்பிரசாத் ரெட்டிக்கு தளி தொகுதியும், ஏ.பி.முருகானந்தம் போட்டியிட திருப்பூர் தெற்கு தொகுதியும் அண்ணாமலை கேட்டிருந்தார்.
தி.மு.க.வில் இருந்து வந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மகன் பிரேம்குமார், காங்கிரசில் இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது. பட்டியலில் 5 பேர் பெண்கள்.
nsmimgGallerynsmimg
காங்கிரஸ் லிஸ்ட்
தி.மு.க. கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சி 28 தொகுதிகளுக்கு தலா 3 பேர் பரிந்துரை செய்து, டில்லிக்கு அனுப்பியது.
பட்டியல் தயாரிப்பில் பணம் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததும், மேலிடம் அதை நிராகரித்து விட்டது.
இரண்டாவது பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை காங்கிரசின் மத்திய தேர்வு குழு பரிசீலித்தது. கட்சி தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின், 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்தனர்.
பட்டியலை, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் நேற்று மதியம் வெளியிட்டார். மேலுார் தொகுதிக்கு வேட்பாளர் தேர்வில் சிக்கல் நீடிக்கிறது. அது மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் 17 பேரில், 5 பேருக்கு மட்டும் மறு வாய்ப்பு இல்லை. மற்றவர்கள் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பிரின்ஸ், கணேஷ், ராஜ்குமார் சீட் மறுக்கப்பட்ட உறுப்பினர்கள். மற்ற இரண்டு பேரின் தென்காசி, விருத்தாசலம் தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. பா.ம.க. ராமதாஸ் அணியில் இருந்து, சமீபத்தில் காங்கிரசுக்கு வந்த தமிழ் குமரனுக்கு பென்னாகரம் தரப்பட்டுள்ளது. இவர் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் மகன்.
இதற்கிடையே, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே, வேட்பு மனு தாக்கல் செய்த தஞ்சை மாவட்ட துணை தலைவர் முரளிதரனை, கட்சியில் இருந்து நீக்கி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
பாசக்க நாசமாப்போகணும் ன்னு நினைச்சவங்க, நோட்டாவோடதான் போட்டி ன்னு சிரிச்சவங்க, இப்போ அண்ணாமலைக்கு சீட்டு கிடைக்கலையே ன்னு கவலைப்படுதாங்க .... வேடிக்கையா இல்ல ????
அனைவரும் திமுக பேராராசின் உள்ளே இயங்குவது வேதனை அளிக்கிறது.
தரக்குறைவாக பேசும் அமர் பிரசாத் ரெட்டிக்கு சீட் தராதது நியாயம். ஜால்ரா கூட்டம் அண்ணாவுக்கு ஆபத்தை தந்திருக்கும். அடுத்த தேர்தலுக்கு முன் அதிமுக தானாகவே அழிந்துவிடும். . அப்போ அண்ணாமலை போட்டியிடலாம்.
அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து என்றைக்கு நயவஞ்சக திராவிட பாஜாக மற்றும் சில ஊடக புரோக்கர்ளின் பேச்சை கேட்டு நீக்கினார்களோ அன்றைக்கெ தமிழக பாஜாக செத்து விட்டது, அதிமுகவிடம் அடிமையாகி லட்சகணக்கான ஆதரவாளர்களின் மனங்களை புண்படுத்தி விட்டார்கள் , பழனிசாமி நயவஞ்ககத்தின் மொத்த உருவம் . மே 4 லில் தெரியும் பாஜாகவில் எத்தனை பேர் தேறுவார்கள் என்று.
இங்கு அனைவரும் அண்ணாமலை அண்ணாமலை என்கின்றனர்.ஆனால் அவர் ஏற்கனவே பாஜக பலமான கோவையில்தான் போட்டியிட விரும்புகிறாரே தவிர தனது சொந்த தொகுதியான அரவக்குறிச்சியில் போட்டியிட தயங்குகிறார். ஏனெனில் அங்கு அவர் கட்சியை வளர்க்க வில்லை. அதை ஏன் என்று யாராவது கேட்பீர்களா?
பேசாம மே.வங்காளத்துக்குப் போய் பிரச்சாரம் செய்யலாம். கொஞ்சமாவது தேறும்
அமித்ஷா இந்தியாவுக்கே பெரிய அரசியல் சாணக்கியர்... ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏமாந்த சோணகிரி... தமிழக வாக்காளர்களின் மனநிலைக்கு சற்றும் ஏற்றதாக இல்லை இந்த பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு. தேர்தல் முடிவுகள் திருட்டு உருட்டு திராவிஷ திமுகவுக்கே சாதகமாக அமையப்போகிறது.
இப்போது புரியாத ( தெரியாத) பல விஷயங்கள் தேர்தலுக்கு பிறகு பாஜக விற்கு புரியும்.
அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி அதோ கதி தான்.

அண்ணாமலை மத்திய அமைச்சராக பதவி ஏற்பார் என அறிவியுங்கள், மற்றதை தமிழக பாஜக தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள்